மத்திய மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள 97,461 பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கொடைக்கானலில் உள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததைத் கண்டித்து
புதன்கிழமை சார்நிலைக் கருவூல அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பள்ளிக்கல்வி
- இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள
திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் (Open Universities) முதுகலை பட்டப்படிப்பு
(PG) பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய
உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி - 1 முதல் 75 வரையுள்ள
தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி
அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு 08.08.2015 அன்று சென்னை, தொடக்கக் கல்வி
கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
அரசு
அறிவித்த தேதிக்கு முன், ஈரோடு மாவட்டத்தில், ஆசிரியர் இடமாறுதல்,
'கவுன்சிலிங்' நடத்த முயன்றதால், ஆசிரியர்கள், அதிகாரிகள் இடையே மோதல்
ஏற்பட்டது; பின், அதிகாரபூர்வமற்ற கவுன்சிலிங் நிறுத்தப்பட்டது.
தமிழக
தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், 75 பேருக்கு, உதவி தொடக்கக் கல்வி
அலுவலர் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது; இதற்கான, 'கவுன்சிலிங்' நாளை
மறுநாள் நடக்கிறது.தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்கள்
மற்றும் பணி நிரவல், பணி மாறுதலால் காலியாகும் இடங்களுக்கு, ஆசிரியர்
இடமாறுதல் கவுன்சிலிங், 8ம் தேதி துவங்குகிறது; முதலில், தொடக்கக் கல்வி
கவுன்சிலிங் நடக்கவுள்ளது.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பிறப்பித்தார்.
பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல்
விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து, வேலைவாய்ப்புக்காக முதல் நாளிலேயே 73,294
மாணவர்கள் இணையவழி மூலம் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வருகிற 19-ஆம் தேதி வரை பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில்
கடந்த 3 ஆண்டுகளாக சாரணர் இயக்கம் சார்பில் வழங்கும் 'ராஜ்ய புரஸ்கார்'
எனும் கவர்னர் விருது வழங்காமல் கிடப்பில் உள்ளது. இதற்காக ஆயிரத்து 500
மாணவர்கள் காத்திருக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் இவ்விருதுக்கான
எழுத்து தேர்வு நடத்தப்படும். 13 வயதுக்குட்பட்ட 8, 9ம் வகுப்பு மாணவர்கள்
தேர்வில் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் சென்னையிலுள்ள
சாரணர் இயக்க தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
ஃபேஸ்புக்கில்
இப்போது வீடியோ பார்ப்பது மிகவும் எளிதாகிவிட்டது. நியூஸ்ஃபீடில்
பார்த்தால் நிறைய வீடியோக்கள் தென்படுகின்றன. இதுதான் கூகுளின்
யூடியுபூக்குச் சிக்கலாக உள்ளது. இதனால் ஃபேஸ்புக் - யூடியூப் ஆகிய இரு
நிறுவனங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இரைச்சல்,
புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால் உலகம்
ஸ்தம்பித்துவரும் நிலையில் சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் சுற்றுச்சூழல்
பாதுகாப்பிற்காக மீண்டும் சைக்கிள் பயணத்தை ஊக்குவித்து வருகின்றன.
சைக்கிளை ஓட்ட விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக பேட்டரியில்
இயங்கும் சைக்கிளை தயாரித்திருக்கிறார் ஒரு இங்கிலாந்துக்காரர்.
விருதுநகர்:பிளஸ்
2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பத்து பாடங்களின்
ஆசிரியர்களுக்கு ஆக.,11 முதல் மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட
உள்ளது.கடந்த
கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து
பள்ளிக்கல்வித்துறை மாவட்டவாரியாக ஆய்வு மேற்கொண்டது. குறிப்பிட்ட பத்து
பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி குறைந்ததுதான் அதற்கு காரணம் என
கண்டறியப்பட்டது. அப்பாடங்களின் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து இந்தாண்டு
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2
வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது தொடர்பான தலைமையாசிரியர்களுக்கான
சிறப்பு பயிற்சி முகாம் 5 தினங்கள் நடைபெற்றன.திருநெல்வேலி
மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் நிகழ் கல்வி ஆண்டில் 10
ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்
என்ற அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கான தலைமை பண்பு குறித்த சிறப்பு
பயிற்சி முகாம் 5 தினங்கள் நடைபெற்றன.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.
ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பமா: ஆசிரியர்கள் குமுறல்
ஆசிரியர்கள்
பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக கல்வித் துறையின் தளர்த்தப்பட்ட
நிபந்தனையிலும் குழப்பம் நீடிப்பதாக ஆசிரியர்கள் புகார்
தெரிவித்தனர்.
அரசு ஊழியர் வீடு கட்ட, அரசிடம் பெறும் கடனுக்கு, குறைந்தபட்சம், 5.50
சதவீதம்; அதிகபட்சம், 10 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, அரசு
உத்தரவிட்டுள்ளது.நடப்பு நிதியாண்டு, அரசு வழங்கும் கடன்களுக்கான, வட்டி
விகிதம் விவரம் குறித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.