தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த
நன்னாளிலே சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், அஷ்ட லஷ்மிகளும்
நம் வீட்டில் வாசம் செய்யும், நம்மை காக்கும். மன்மத வருடம், தை மாதம்
முதல் நாள் 15.1.2016 வெள்ளி அன்று பொங்கல் பானை வைத்து பொங்கல் பொங்கவும்,
சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நல்ல நேரம் காலை 9 மணி முதல்
10.30 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். Public Exam 2026
பொங்கல் பண்டிகையின் வரலாறு மற்றும் விதிமுறைகள் - படையல் பூஜை செய்திட உகந்த நல்ல நேரம்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த
நன்னாளிலே சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், அஷ்ட லஷ்மிகளும்
நம் வீட்டில் வாசம் செய்யும், நம்மை காக்கும். மன்மத வருடம், தை மாதம்
முதல் நாள் 15.1.2016 வெள்ளி அன்று பொங்கல் பானை வைத்து பொங்கல் பொங்கவும்,
சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நல்ல நேரம் காலை 9 மணி முதல்
10.30 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். கம்ப்யூட்டர் தெரிந்தால் தான் இனி மத்திய அரசு வேலை!
அரசு பணிகளில், எழுத்தர்களுக்கு பதில்,
நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த, நிர்வாக உதவியாளர்களை
பணியில் சேர்க்க,மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில்,
எல்.டி.சி., எனப்படும், கீழ்நிலை எழுத்தர், யூ.டி.சி., எனப்படும், உயர்நிலை
எழுத்தர் பணிகள் உள்ளன. மத்திய அரசின் செயலக பணிகளின் முதுகெலும்பாக
இப்பணியாளர்கள் திகழ்கின்றனர். இவர்களுக்கு பதில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட
நவீன சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த இளைஞர்களை, நிர்வாக உதவியாளர் பணியில்
சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்
ஓய்வூதியம்,
ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை
இணையதளத்தில் (http:218.248.44.30ecsstatus) இருந்து பதிவிறக்கலாம் செய்து
கொள்ளலாம்.
'ப்ளே ஸ்கூல்'களுக்கு கட்டணம் நிர்ணயம்
'ப்ளே
ஸ்கூல்' எனப்படும், கே.ஜி., முதல், 3ம் வகுப்பு வரையிலான மழலையர்
பள்ளிகளுக்கான கட்டணத்தை, நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயம் செய்ய
உள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளி அங்கீகாரம் வழங்க கெடு
அரசு
உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான, அங்கீகார பிரச்னையை
சரிசெய்யும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தர
விட்டுள்ளார்.
10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் வாக்காளர் பட்டியல் மற்றும் ரேஷன் அட்டை விபரம் சேகரிக்கும் பணி!
பத்தாம் வகுப்பு பாடம் நடத்தும்
ஆசிரியர்களுக்கும், வாக்காளர் பட்டியல் மற்றும் ரேஷன் அட்டை விவரம்
சேகரிக்கும் பணி வழங்கியிருப்பது, ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை
உருவாகியுள்ளது.
பங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை அரசு ஊழியர்கள் அதிர்ச்சி
ராமநாதபுரம்;பல
நாடுகளில் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்ட, அரசு ஊழியர் ஓய்வூதிய
நிதியில் சரிவு ஏற்பட்டுஉள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள்
அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ரயில்வேயில் 18ஆயிரம் பணிக்கு தேர்வு:விண்ணப்பிக்க ஜன.25 கடைசி
மதுரை:மத்திய
ரயில்வே துறையில் 18 ஆயிரத்து காலிப்பணியிடங்களை நிரப்ப, தேர்வு
அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன.,௨௫ க்குள் 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தேர்வு பிப்.27-க்கு ஒத்திவைப்பு
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி உதவித் தொகைக்கான தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
RTI Letter - பள்ளிக்கல்வி துறையில் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்டு ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இல்லை
CPS -பள்ளிக்கல்வி துறையில் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்டு ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இல்லை.தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பதில்
10–ம் வகுப்பு மாணவர்கள் தமிழுக்கு பதில் தெலுங்கில் தேர்வு எழுத அனுமதிகேட்டு வழக்கு அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு
கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தின்படி முதல்
பாடமாக தமிழில் தேர்வு எழுதுவதற்கு பதில், தெலுங்கு மொழியில் தேர்வு எழுத
அனுமதிகேட்டு மாணவர்கள் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக
அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கருவூல இணையதளத்தில் (Web pay roll) ஆதார் எண் உள்ளீடு செய்தல் - செயல்முறைகள்
தொடக்கக்கல்வி--கருவூல இணையதளத்தில் (Web pay roll) ஆதார் எண் உள்ளீடு செய்தல்-தொடர்பு அலுவலர் (Nodal Officer) நியமனம் செய்து ஆணை வழங்குதல் - செயல்முறைகள்-நாள்;11 .01.2016
குழந்தைகளை கவனிக்க பெண்களுக்கு 5 நாள் 'லீவு'-மத்திய அரசு முடிவு
குழந்தைகளை கவனித்து கொள்ள, பெண் ஊழியர்கள், ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது.
அரசு ஐ.டி.ஐ.,க்களில் பயிற்சியாளர் வேலை
அரசு
ஐ.டி.ஐ.,க்களுக்கு, 329 இளநிலை பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு, பிப்., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழக அரசின் வேலைவாய்ப்பு
துறையின் கீழ் செயல்படும், அரசு ஐ.டி.ஐ.,க்களில் காலியாக உள்ள, 329 இளநிலை
பயிற்சியாளர் இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு,
பிப்., 1க்குள், 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
கனமழையால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு பள்ளி வேலை நாட்களை 200 நாட்களாக குறைக்க - SSTA கோரிக்கை
Monday, 11 January 2016 - 2016- புத்தாண்டை முதல் வெற்றியுடன் ஆரம்பித்தது !!! ( தமிழகம் முழுவதும் தகுதி காண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் Probationary ஆணை) இன்று(11.01.2016) SSTA வின் மாநில பொறுப்பாளர்கள் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை SSTA சார்பாக தெரிவித்தனர்....
அரையாண்டு தேர்வில் புதிய வினாத்தாள் அறிமுகம்
பிளஸ்
2 மற்றும் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, நேற்று துவங்கியது. பொதுத்
தேர்வுக்கு முன்னோட்டமாக, தேர்வு துறையின் புதிய வினாத்தாள் அறிமுகமாகி உள்ளது.'கடந்த
ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில்
மாற்றம் கொண்டு வரப்படும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
அதனால், அனைத்து மாணவர்களும் புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே,
'சென்டம்' பெறலாம் என்ற நிலை உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 'லேப் டெக்னீஷியன்' வேலை
அரசு
மருத்துவமனைகளில், 'லேப் டெக்னீஷியன்' 710 பேர், மாதம், 8,000 ரூபாய் என்ற
தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்; இதற்கு, பிப்., 1க்குள் விண்ணப்பிக்க
வேண்டும்.அரசு மருத்துவமனைகளில், லேப் டெக்னீஷியன் பணிக்கு, 8,000 ரூபாய்
சம்பளம் என்ற தொகுப்பூதிய அடிப்படையில், 710 பேரை சேர்க்க, அரசு முடிவு
செய்துள்ளது.
திருவாரூர் அரசு கலைக் கல்லுாரி முதல்வருக்கு வெட்டு பேராசிரியர்கள் போராட்டம்
முறைகேட்டை
தட்டிக்கேட்ட, திருவாரூர் அரசு கல்லுாரி முதல்வர் தாக்கப்பட்டதை
கண்டித்து, சென்னையில், பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாரூர்
அரசு கலைக் கல்லுாரி முதல்வர் பொறுப்பில் இருந்த பேராசிரியர் சிவராமன்
மீது, கடந்த வாரம், கல்லுாரி ஊழியர் ஒருவரே, கூலிப்படையை ஏவி, தாக்குதல்
நடத்தியுள்ளார்.
காமராஜ் பல்கலை தொலை தூர கல்வியில் மாணவர் சேர்க்கை
மதுரை காமராஜ் பல்கலை தொலைதூரக் கல்வி மையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான
மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்.,
பி.காம்.,(சி.ஏ.,), பி.சி.ஏ., பி.லிட்., பி.பி.ஏ., எம்.ஏ., எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., டிப்ளமோ, டிப்ளமோ(பி.ஜி.,), சர்டிபிகேட்
மற்றும் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும்
சேர்க்கை நடக்கிறது.
பிளஸ் 2 தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்ககூடாது!
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, சேலம் மாவட்ட
பொதுக்குழு கூட்டம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.இதில் மாநில
பொதுச்செயலாளர் கோவிந்தன், பேசியதாவது:








