Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2026

மா சே துங்


   




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:490

குறள்:

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

பொருள்:

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பது போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

பழமொழி :

Nothing is impossible to a willing heart.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“உன் திறமைக்கு எல்லை இல்லை; உன் முயற்சிக்கு மட்டும் எல்லை வைக்காதே.”

Thought for the Day :

“Your future is shaped by what you learn, practise, and create today.” 🌱

பொது அறிவு : 

1. 10 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 கோனார் சூரிய கோயில் (ஓடிஸா) 

2. மனித உடலில் எத்தனை சதவீதம் தண்ணீர் உள்ளது? 

60 சதவீதம் 

English words :

1. Coherent – Clear and logical, தெளிவான மற்றும் தர்க்கரீதியான.


2. Discreet – Careful and private, ரகசியம் காப்பவர் / நிதானமானவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

தொட்டபெட்டா பகுதி புல்வெளிகள், சோலைக்காடுகள் மற்றும் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றது. இங்குள்ள தொட்டபெட்டா சிகரக் காட்சி முனையம் (Doddabetta Peak Viewpoint) சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.இது தமிழ்நாடு சுற்றுலாவின் முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.

NMMS :

MAT 

ஒரு முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் ___________ முட்டைகள் இடும்.

 (1) 600. 

 (2) 500.

 (3) 5000. 

 (4) 6000. 

 விடை: (2) 500

செப்டம்பர் 09

மா சே துங்  அவர்களின் நினைவுநாள்

மா சே துங் (About this soundMao Zedong , Mao Zedong, டிசம்பர் 26, 1893செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த 
கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்

நீதிக்கதை

 நண்பர்களின் அன்பு 

ஒரு அடர்ந்த காட்டில் யானை , மான், குரங்கு, முயல், கிளி ஆகியவை நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தன.

ஒருநாள் காலை , வழக்கம்போல் எல்லோரும் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் மான் மட்டும் வரவில்லை .

“மான் எங்கே போய்விட்டது?” என்று முயல் கவலையுடன் கே ட்டது.

“நேற்று மாலை மானுக்கு உடல்நிலை சரியில்லை என்று கிளி சொன்னது!” என்றது குரங்கு.

உடனே யானை , “அப்படியா? நண்பன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது நாம் இங்கே விளையாடிக் கொண்டிருக்கலாமா? வாருங்கள், மானைப் பார்த்து நலம் விசாரிப்போம்!” என்றது.

அனைவரும் மானின் குடிலுக்குச் சென்றனர்.

“மான் நண்பா! எப்படி இருக்கிறாய்?” என்று யானை அன்புடன் கேட்டது.

“உங்களைப் பார்த்ததும் எனக்கு பாதி உடல்நலம் வந்துவிட்டது!” என்று மான் சிரித்தது.

முயல், “உனக்காக இனிப்பான பழங்கள் கொண்டு வந்திருக்கிறேன்!” என்றது.

குரங்கு உடனே , “நான் உனக்காக மரத்திலிருந்து பறித்த தேனும் கொண்டு வந்திருக்கிறேன்!” என்றது.

அதைப் பார்த்த மான் மிகவும் மகிழ்ந்தது. “நண்பர்கள் துன்பத்தில் இருக்கும்போது அவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பதுதான் உண்மையான அன்பு!” என்றது.

அன்றிலிருந்து காட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை யென்றாலும், ஏதேனும் துன்பம் ஏற்பட்டாலும், எல்லா விலங்குகளும் ஒன்றாகச் சென்று அவர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கத் தொடங்கின.

நீதி:

🌷 நாம் அறிந்தவர்களை அன்புடன் சந்தித்து நலம் விசாரிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தரும்

இன்றைய செய்திகள்

09.09.2026

🗒️மத்திய அரசு வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டின் காற்று தூய்மையாக உள்ள நகரங்களின் தேசிய தரவரிசை பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் சென்னை 35 வது இடத்தில் உள்ளது.

🗒️நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு: தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் தொடங்கப்படுகிறது.

🗒️தமிழ்நாட்டுக்கு காவிரியில் 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

🗒️இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் கடும் பாதிப்பு: மீண்டும் இயங்கத் தொடங்கிய விமான நிலையங்கள்.

விளையாட்டுச் செய்திகள்

🏀பாரா உலக வில்வித்தை: ஷீத்தல் தேவி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

🏀அரைஇறுதியில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை சரிதா வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் வாங் ஷூயிடிங்கை எதிர்கொள்கிறார்.

Today's Headlines

🗒️ The Central Government has released the 2026 national ranking of cities with clean air. Chennai is ranked 35th.

🗒️ A postgraduate course in Theatre Arts will be started in Chennai by the Tamil Nadu Government.

🗒️ The Cauvery Water Regulation Committee has recommended releasing 6,000 cusecs of water to Tamil Nadu.

🗒️ Indonesia was badly affected by a volcanic eruption. Airports have now started operating again.

🏹 Sports News

🏀 Para World Archery: Indian archer Sheetal Devi has reached the final.

🏀 Indian archer Sarita, who lost in the semi-final, will face China’s Wang Shuiding in the bronze medal match.

Covai women ICT_போதிமரம்

 

12th Pre Quarterly Exam - Question Papers with Answer Keys Download

    

10th Pre Quarterly Exam - Question Papers with Answer Keys Download

    

12th Standard - physics - Public Exam Question Bank

 


12th Standard Botany - Unit 1 - Important Questions

 


12th Standard - Bio - Botany - Creative & Diagram Questions

 


Pre Quarterly Exam 2026 - Question Paper - PDF Download

 


10th Standard - Science - Study Material - PDF Download

 


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive