Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக் கூடாது: திமுக தலைவர் கருணாநிதி - நாளிதழ் செய்தி


           ஆசிரியர் தகுதித் தேர்வில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தலைமையின்றி தள்ளாடும் ஆதிதிராவிட நலப்பள்ளிகள்


           தமிழகம் முழுவதிலும் உள்ள, 26 ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருப்பதால், மாணவர்களின் கல்வித் தரம், பாதிக்கப்படும் அபாயம், உள்ளது.
 

டைப்ரைட்டிங் தேர்வுகள் ஆக.18ம் தேதி ஆரம்பம்


           தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

PG TRB - "ரிசல்ட்' எப்போது? எங்கே நியமனம்?


              முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று நடக்கிறது. இதில், 1.67 லட்சம் பேர், பங்கேற்கின்றனர். ஒரு பணிக்கு, 58 பேர் வீதம், போட்டி போடுகின்றனர்.


அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட 90 ஆயிரம் அதிகரிப்பு


            அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 90 ஆயிரம் அதிகரித்துள்ளதாக தொடக்கக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

“காலை உணவு திட்டம்” – (PROJECT AHAR)-- துவக்கம்

 
சென்னை மாவட்டம் – திருவல்லிக்கேணி ஓன்றியம் – அரசு நிதி உதவி M.O.P. வைணவ துவக்கப் பள்ளியில் அசத்தல் --- 

                 சென்னை மாவட்டம் – திருவல்லிக்கேணி ஓன்றியம் – அரசு நிதி உதவி M.O.P. வைணவ துவக்கப் பள்ளியில் “காலை உணவு திட்டம்” (PROJECT AHAR) துவக்கம். இத்திட்டத்தை பற்றி இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திரு. க. சாந்தகுமார் அவர்களின் விரிவான விளக்கம்:

குழந்தைகள் பள்ளிகளில் சாப்பிட பெற்றோர் தடை


               காரி்ல் சமீபத்தில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் பள்ளிகளில் வழங்கப்படும் உணவை சாப்பிட குழந்தைகளின் பெற்றோர் தடை
விதித்துள்ளனர். குறிப்பாக சம்பவம் நடைபெற்ற பள்ளியில் மாணவர்கள் சாப்பிட பெற்றோர் அனுமதிக்கவில்லை. 
 

பள்ளி மாணாக்கர்களை ஊக்குவிக்கும் புதிய முயற்சி : தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி சார்பில் ஏற்பாடு

          
             அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி 8ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை கல்லூரியின் ஆய்வகங்களை பார்வையிட்டனர். 

     
 
          

40 நாளில் படித்து 24 மணி நேரம் தேர்வு: பிளஸ் 2 மாணவர் சாதனை


                காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பிளஸ் 2 மாணவர் அருண்குமார், லிம்கா சாதனைக்காக, தொடர்ச்சியாக 24 மணி நேரம் தேர்வு எழுதினார். அவர் சராசரியாக 184 மதிப்பெண் பெற்றார்.

மதிய உணவு சாப்பிட்ட164 மாணவியருக்கு வாந்தி, மயக்கம்


              என்.எல்.சி., பெண்கள் பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட, 164 மாணவியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,800 பேர் பணி நியமனம்


               பள்ளி கல்வித் துறையில், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், 1,800 பேர், விரைவில், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
 

2015ல் கல்வி அறிவு இலக்கு 80 சதவீதம்: அமைச்சர் பல்லம் ராஜூ


                   வரும் 2015-ம் ஆண்டிற்குள் நாட்டின் மக்கள் தொக‌ையில் சுமார் 80 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பர் என மனிதவள மேம்பாட்டு்ததுறை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூய தமிழ்ச்சொற்கள் உலகம் போற்றும் திருக்குறள் பற்றி நாம் அறிய வேண்டிய செய்திகள்!


திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

கூடுதல் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை


             உயர்நிலைப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யும் போது, தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க, அரசு பரிசீலனை செய்து வருகிறது. 
 

இயக்குநர் உத்தரவு.


               அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரத்தை அளிக்க கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

              

தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் ப‌தவி உயர்வு ‌தொடர்பான நடைமுறைகளை ஆராயும் குழுவிடம் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி / தமிழாசிரியர் கழகம் சார்பில் அளித்த கடிதத்தின் விவரம்

 
                தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அரலுவலர் ப‌தவி உயர்வு  ‌தொடர்பான நடைமுறைகளை ஆராய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது . 
 

மருத்துவப் படிப்பில் சேர ஒரே நுழைவுத்தேர்வு இல்லை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு


                நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத்துவ கவுன்சிலிங் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

இன்ஸ்பயர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு


                 மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் "இன்ஸ்பயர்" விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக, "இன்ஸ்பயர்" புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதை வழங்குகிறது.
 

புதிய பாடதிட்டத்தில் கற்பித்தல் என்பது இனி கிடையாது!


           ஆசிரியர்கள் பணி என்பது முன்பு கற்பிப்பவர்தான். ஆனால் தற்போது வந்துள்ள புதிய கல்விமுறைப்படி மாணவர்களுக்கு ஆசிரியர் கல்வி வழிகாட்டிதான் என்று தூத்துக்குடியில் நடந்த பயிற்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 

இலக்கணத்தை எளிய முறையில் கற்கலாம்: பயிற்சியில் தகவல்


             "செயல்வழி கற்றல் மூலம் இலக்கணத்தை கற்று கொடுப்பதால் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்" என பொள்ளாச்சியில் நடந்த பயிற்சி முகாமில் பயிற்சியாளர்கள் பேசினர்.
 

அரசு பணிகளில் சேர திருநங்கைகளுக்கு தனித்தேர்வு நடத்த அரசுக்கு பரிந்துரை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்


             அரசு பணிகளில் சேர திருநங்கைகளுக்கு தனித்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.
 

ஊரகத் திறனாய்வு தேர்வு: 9ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


      கிராமப்புற மாணவர்களுக்கான, ஊரகத் திறனாய்வு தேர்வு, செப்., 22 ல் நடக்கிறது. விண்ணப்பங்களை, "ஆன் லைன்" ல், பெறலாம்.
 

நேர்காணலில் என்ன செய்யக்கூடாது?

 
          வேலை கிடைப்பதற்கு இன்று இருக்கும் போட்டிகள் நிறைந்த சூழலில் ஒவ்வொரு நிலையையும் மிகவும் கடினத்துடனேயே கடக்க வேண்டியிருக்கிறது. அதுவும் எழுத்துத் தேர்வுகளை எதிர்கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக விடைகளை தருவதுடன், நெகடிவ் மதிப்பெண் அபாயத்தையும் வெற்றிகரமாகக் கடப்பது போன்ற சவால்கள் அதிகம்தான்.

Paper 2 - TNTET-2013- Answer Key download Aug-2013 |Tamilnadu Teacher Eligibility Test Exam Result date:18.08.2013-Tentative Answer Key


இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் 2

கீ ஆன்சர்கள் தற்போது நமது வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான கீ ஆன்சர்கள் உரிய புத்தகம் மற்றும் பக்க எண்ணுடன் தரப்பட்டுள்ளது.

This is Tentative Answer Key Only. TRB will publish correct Answer.

Child Development & Pedagogy Key Answer Now 
Updated.

Tamil Key Answer Now Updated

English Key Answer Now Updated.

Maths & Science Key Answer Now Updated.

Maths Derivation Now Updated.

Social Science Key Answer Now Updated.

Sl.No
Subject
Question (or) Answer Keys
1Child Development and Pedagogy
(relevant to age group 6 – 11)
2Language I

Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu
3Language II - English
4Mathematics & Science
5Social Science



Paper - 1 -TNTET-2013- Answer Key download Aug-2013 |Tamilnadu Teacher Eligibility Test Exam Result date:17.08.2013-Tentative Answer Key


              
Sl.No
Subject
Question (or)Answer Keys
1Child Development and Pedagogy
(relevant to age group 6 – 11)
2Language I

Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu
3Language II - English
4Mathematics
5Environmental Studies

TET - மைக்ரோ பயாலஜி பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் கனவு தகர்ந்தது


         மைக்ரோ பயாலஜி, சமூக பணி இளநிலை பட்டம் பெற்று, பி.எட்., முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், அவர்களின் ஆசிரியர் கனவு தகர்ந்துள்ளது.




பள்ளி வேலை நேரத்தில் விழாக்கள்: கல்வித் தரம் பாதிக்கப்படும் அபாயம் - நாளிதழ் செய்தி


          அரசு பள்ளிகளில் வேலை நேரத்தில் விழாக்களை நடத்தி கால விரயம் செய்யப்படுவதால் மாணவ, மாணவிகள் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை: மாணவர் சேர்க்கை அவகாசம் நீடிப்பு


           தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.,யில் எம்.பி.ஏ., எம்.எஸ்சி, எம்.காம், எம்.ஏ, எம்.சி.ஏ, பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ ஆகிய பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான அட்மிஷன் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.


        2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப  பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதன் படி

1 20.07.2013  சனிக்கிழமை  காலை 10மணி மாவட்டத்திற்குள்
2 22.07.2013  திங்கட்கிழமை காலை 10 மணி மாவட்டம் விட்டு மாவட்டம்

கலந்தாய்வு நடைபெறும்.

தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு


              2013-14ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங் -களுக்கு 18,20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TET Online Test


TET Online Free and Payable Test 

by Rani TET Park




தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரை - தினமலர்


             மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதை திருத்தம் செய்ய, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலருக்கு, இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற ஆதி திராவிடர்–பழங்குடியினருக்கு பயிற்சி சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் அளிக்க தமிழக அரசு விசேஷ ஏற்பாடு


          ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறச்செய்யும் வகையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின ஆசிரியர்களுக்கு சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் விசேஷ பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

11 புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 180 விரிவுரையாளர் பணி இடங்களுக்கு அனுமதி தமிழக அரசு உத்தரவு


                   தமிழ்நாட்டில் 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 450–க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெனிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு கால பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் பயிற்சி படிப்பில் 2,527 இடங்கள் நிரம்பின


           ஆசிரியர் பயிற்சிப் படிப்பில், 2,527 இடங்கள் நிரம்பின. அரசு, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என, 17 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதனை நிரப்ப, கடந்த மாதம், விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

1st Term Question Preparation Team




தமிழக அரசு உத்தரவு.


               பள்ளிக்கல்வி - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - மாவட்டத்திற்கு சிறந்தபள்ளியை தேர்ந்தெடுத்து தொடக்கப்பள்ளிக்கு ரூ.25000/-ம், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50000/-ம், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75000/-ம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.100000/- வழங்க தமிழக அரசு உத்தரவு.

தரமான சமச்சீர் கல்வித் திட்டத்தை சத்தமின்றி ஏற்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள்


           "சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமாக இல்லை" என, ஒரு சாரார் குறை கூறிக்கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.

கட்டணம் இல்லாமல் ஆங்கில வழிக் கல்வி


             "ஊராட்சி பள்ளிகளில், ஆங்கிலக் கல்வி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டணம் இல்லாமல் இலவசமாக கல்வி கற்கப்படுகிறது" என உதவி தொடக்க கல்வி அலுவலர் குருசாமி தெரிவித்தார்.
 

சிறந்த அரசு பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு: அரசு உத்தரவு


             மாவட்ட வாரியாக, சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை, ரொக்கப்பரிசு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாள், பள்ளிகளில், கல்வி வளர்ச்சி  நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, பள்ளிகளில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

TRBTNPSC


Padasalai Proudly Introduce New Website - www.trbtnpsc.blogspot.in



பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட முன்வர வேண்டும்


           மொபைல் போன் வாங்கி தர மறுத்த காரணத்தால், கோவையில் கடந்த ஆறுமாதங்களில் பள்ளி, கல்லூரி மாணவியர் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழக வெப்பநிலை 2100-ஆம் ஆண்டில் 145 டிகிரியாக இருக்கும்


               பருவநிலை மாற்றம் காரணமாக தமிழக வெப்பநிலை 2100-ஆம் ஆண்டு முடிவில் 145 டிகிரி (ஃபாரன்ஹீட்) என்ற அளவை எட்டும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கைச் சீரழிவைப்போல் தமிழகத்திலும் ஏற்படும் அபாயம் உள்ளது என் றும் அவர்கள் எச்சரிக்கை விடுத் துள்ளனர்.

TET Online Model Test (Free & Payable)


TET Paper 1 - Model Test 2 Now Available

Also Available
TET Paper 1 - Model Test1

Papre 2
TET Paper 2 - Model Test  2
TET Paper 2 - Model Test  1

For more details - Visit - www.ranitetpark.com

By Rani TET Park.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்


              CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் பற்றி விளக்கும் சிறு புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் பாதிப்புகள், வடிவம்  ஓய்வூதிய வரலாறு தற்போதைய நிலை, CPS திட்டத்தில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வு பெற்றவர்களின் பெயர் பட்டியல், பத்திரிகை செய்திகள், CPS திட்டம் பற்றிய கேள்விகள், பழைய மற்றும் புதிய ஓய்வூதிய திட்ட வேறுபாடுகள்  உள்ளிட்டவை  இடம் பெற்றுள்ளது. இப்புத்தகம் வேண்டுவோர் தொடர் கொள்க.

தொடர்புக்கு : திரு.சொக்கலிங்கம் -9786113160

பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: டி.ஆர்.பி., எச்சரிக்கை


          டி.இ.டி., தேர்வை எழுதத் தயாராகி வருபவர்களிடையே, "பணம் கொடுத்தால், வேலை கிடைக்கும்" என்ற தகவலை, சில மர்ம கும்பல்கள், வேகமாக பரப்பி வருகின்றன. இதனால், உஷார் அடைந்துள்ள டி.ஆர்.பி., அமைப்பு, "தேர்வர்கள், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்; நேர்மையான முறையில், தகுதி வாய்ந்தவர் மட்டுமே, ஆசிரியராக தேர்வு செய்யப்படுவர்" என இப்போதே எச்சரித்துள்ளது.

குரூப்-4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்: 15ம் தேதி கடைசி


           குரூப்-4 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவு செய்ய, நாளை (15ம் தேதி) கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நாளை மாலைக்குள், பதிவு செய்துவிட வேண்டும். ஏற்கனவே, ஏழு லட்சம் பேர் வரை பதிவு செய்திருப்பதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

ஒரு மாணவர் 5 மரங்களை நட வேண்டும்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை


               சுற்றுப்புற சூழலை பாதுகாத்து தணணீர் பெற ஒரு மாணவர் ஐந்து மரங்களை நட வேண்டும் என விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேசினார்.


அனுமதியின்றி சுற்றுலா செல்லும் பள்ளிகள்.... காற்றில் பறக்கும் விதிகள் - நாளிதழ் செய்தி


          கல்வி சுற்றுலா செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை, என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் விளைவே, 4 மாணவர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

காமராஜர் பிறந்த நாள்.... கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிப்பு


            தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக" கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
 

24 மணி நேரம் தமிழ் தேர்வு எழுதும் மாணவர்


            காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக்., பள்ளி பிளஸ் 2 மாணவர் அருண்குமார், லிம்கா சாதனைக்காக, தொடர்ச்சியாக 24 மணிநேரம் தமிழ் தேர்வு எழுதினார்.
 

பின்தங்கிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் விரைவில் சிறப்பு வகுப்பு


           கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, 25 கல்லூரிகளில், சிறப்பு வகுப்புகளை நடத்த, அரசு திட்டமிட்டு உள்ளது.
 

பள்ளிகளின் கணினி விவரங்களை அனுப்ப சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு


            தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பழுதான கணினி விவரங்களை சேகரித்து அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
 

முதல்வர் தகுதி பரிசுக்கான மதிப்பெண் வெளியீடு


             பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர், முதல்வர் தகுதி பரிசுக்காக விண்ணப்பிக்க, நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
 

''முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை: அரசு பள்ளிகள் சாதனை''


           அரசு வழங்கும் விலை இல்லா பாடப்புத்தகம், புத்தகப்பை, காலணி உள்ளிட்டவை விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் 1-வது வகுப்பில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
 

ஊதிய குழு அறிக்கை வெளியிட வேண்டும் ஆசிரியர்கள் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்


             பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
1.ஆறாவது ஊதிய மாற்ற முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட 3 நபர் குழு அறிக்கை வெளியிடப்பட வேண்டும். 
 
2.மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
 

1098 - இது குழந்தைகளுக்காக... யுவகிருஷ்ணா


            குழந்தைகளுக்கு உதவும் 1098 எண் இந்தியாவில் ரொம்ப பிரபலம். 17 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 கோடி அழைப்புகள் இந்த எண்ணுக்கு வந்திருக்கின்றன. உதவியோ, ஆலோசனையோ தேவைப்படும் குழந்தைகள்
கண்ணை மூடிக்கொண்டு இந்த எண்ணுக்கு போன் செய்யலாம். 
 

பாதுகாப்பை உறுதி செய்யாமல் சுற்றுலா அழைத்து செல்ல கூடாது: பள்ளிகளுக்கு கல்வி துறை உத்தரவு


             கடலில் மூழ்கி மதுரையை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால், 'சுற்றுலா செல்லும் இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்யாமலும், அனுமதி பெறாமலும் கல்வி சுற்றுலா செல்ல கூடாது' என்று பள்ளிகளுக்கு கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
 

என்னென்ன பின்னணி உடையவர்கள் அரசு பணிக்கு வருகிறார்கள்? என்பது குறித்து ஆய்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு


அரசு வேலை மீது மோகம்
         என்னதான் தனியார் துறையில் குறிப்பாக சாப்ட்வேர் துறையில் அதிக சம்பளத்தை கொட்டிக்கொடுத்தாலும் இன்றைய இளைஞர்களிடம் அரசு வேலை மீது மட்டும் தனி மோகம் உள்ளது. என்ஜினீயரிங் முடித்துவிட்டு தகவல் தொழில்நுட்பத்துறையில் நல்ல வேலையில் இருக்கும் பலர் அண்மைக்காலமாக அங்கிருந்து அரசு பணி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
 

List of Central Government Posts – Compilation of All Posts in Central Civil Services

Thanks to Mr. Rajendran. ( Postal Department.

 List of Central Government Posts – Compilation of All Posts in Central Civil Services… One more fantastic compilation of posts are practice in Central Government Services, published in the popular website for Central Government Employees and Pensioners, CGEN.in (www.centralgovernmentemployeesnews.in). 
The complete article is reproduced and given below for our visitors... 

பாதுகாப்பை உறுதி செய்யாமல் சுற்றுலா அழைத்து செல்ல கூடாது: பள்ளிகளுக்கு கல்வி துறை உத்தரவு

 
             கடலில் மூழ்கி மதுரையை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால், 'சுற்றுலா செல்லும் இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்யாமலும், அனுமதி பெறாமலும் கல்வி சுற்றுலா செல்ல கூடாது' என்று பள்ளிகளுக்கு கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை திருநகர் சி.எஸ்.ராமச்சாரி மெட்ரிக்குலேஷன்
 

ஆய்வு கூட்டம்

                         முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் நேர்முக உதவியாளர்கள் கலந்துகொள்ளும் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் 13.07.2013 அன்று நடைபெறுகிறது.

 

185 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி


               சென்னை மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள, 85 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive