NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டச்சான்று நடைமுறை பல்கலையில் மாற்றம்

           மதுரை காமராஜ் பல்கலையில் மாணவர்கள் பட்டச்சான்று பெறும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இப்பல்கலை மற்றும் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பிரிவு உள்ளிட்ட பட்டப் படிப்பு முடித்தவர்கள், பட்டச்சான்றிதழ் கோரி, தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர். 
 
                இதுவரை பட்டச்சான்று கோரி நேரடியாக விண்ணப்பிக்க விரும்புவோர், பல்கலை இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்டதை சான்றிதழ் பிரிவில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். பின் அது பரிசீலிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சான்றிதழ் வழங்கப்படும்.ஆனால், தற்போதைய புதிய நடைமுறைப்படி, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சான்றிதழ் பிரிவில் சமர்ப்பிக்காமல், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு விண்ணப்பங்கள் விவரம், கணினியில் பதிவு செய்யப்பட்டு, தேர்வாணையரின் கையொப்பமிடப்பட்டு, அதன் பின் சான்றிதழ் பிரிவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும்.
                     நேரடியாக சான்றிதழ் பிரிவிற்கு செல்லும் விண்ணப்பங்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வழியாக செல்வதால், தாமதம் ஏற்படுகிறது. மேலும், சம்மந்தப்பட்ட ஆண்டில் பட்டச்சான்று பெற தவறுபவர்கள், ரூ.1500 கட்டணம் செலுத்தி 10 நாட்களில் சிறப்பு பட்டச்சான்று பெறும் நடைமுறையும் உள்ளது. புதிய நடைமுறையால் இதிலும் தாமதம் ஏற்படும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.'சான்றிதழ் பிரிவிற்கு நேரடியாக விண்ணப்பிக்கும் போது சிலர் முறைகேட்டில் ஈடுபட்டு சான்றிதழ் வழங்குவதாக வெளியான தகவலால் தான் அதை தடுக்கும் வகையில் இப்புதிய முறை கொண்டு வரப்பட்டது,' என பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விஜயன் கூறுகையில், "புதிய நடைமுறையால் மாணவர்களுக்கு பட்டச்சான்று விரைவில் கிடைக்கின்றன. தாமதம் ஏற்பட சிறிதும் வாய்ப்பில்லை. மாணவர்களிடம் இது வரவேற்பை பெற்றுள்ளது," என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive