NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஈஎஸ்எல்சி தேர்வெழுதும் தனித்தேர்வர்கள் கவனத்துக்கு..

                    


           ஈஎஸ்எல்சி பொதுத் தேர்வு செப்டம்பர் 2014 - தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.


          அதில், செப்டம்பர் மாதம் நடைபெறும் ஈ.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு எழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கபட்ட நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 18.09.2014 (வியாழக் கிழமை) முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று “ESLC SEPTEMBER 2014 EXAMINATION - HALL TICKET” என்ற வாசகத்தினை கிளிக் செய்து அதில் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இத்திட்டத்தில் விண்ணப்பித்தத் தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.




1 Comments:

  1. படிப்பதற்கு அருகில் பள்ளிக்கூடம் இல்லாமலும், உயர் நிறுவனங்களில் படிக்க வைக்க பணவசதி இல்லாமலும், தொழிட்நுட்ப வசதி இல்லாத அன்றைய காலகாட்ட்த்திலும், பஞ்சம் பட்டினியோடு இருந்தாலும் படிப்பு ஒன்றே மூலதனம் என பள்ளிக்கூடம் சென்ற தலைமுறையின் முதல் பட்டதாரி ஆசிரியரின் கனவை ஆழமான குழி தோண்டி புதைக்க வந்துவிட்டான் எமன் உருவில் ஜி.ஓ 71....

    62,500 குடும்பங்களையும் இனிவரும் ஒவ்வொரு ஆசிரியரின் குடும்பங்களையும் காட்டுமிராண்டித்தனமாக காவு வாங்கிவிட்டது ஜி.ஓ 71....

    இந்த அரசாணை அப்பாவிகளின் உயிரை குடித்துவிடும் என எண்ணியிருந்தால் அரசு அன்றே அரசணை 71ஐ அமல்படுத்தி இருக்காது....



    மக்களின் நலனுக்காக ஆட்சி அதிகாரம் பெற்ற அரசாலும் அரசின் உயர்மட்ட அமைச்சர்களாலும் உருவாக்கப்படுவதே அரசாணை ஆகும்...

    ஆகவே அரசாணை என்பது மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுகிறது, மதிக்கப்பட வேண்டும்...

    அதை விட முக்கியமானது அரசாணையால் ஒரு அப்பாவி கூட பாதிக்கப்பட கூடாது இதுதானே நியாயம்!, இதுதானே சமூகநீதி!!...

    அரசாணை 71ஆல் பாதிக்கப்பட்டோம் என ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தையும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடுரோட்டிலும் இறங்கி போராடினார்கள் அதன் உள் விளைவை அறிந்து நீதியரசர் திரு சசிதரன் அவர்கள் தடைஆணை பிறப்பித்தார்கள்...



    இதற்கிடையில் போராட்டக்குழு அரசின் அனைத்து உயர்மட்டக் குழுவிடமும் கோரிக்கை மனு அளித்து இருக்கின்றனர்...

    அரசானை 71ன் பாதிப்பை அனைத்து மக்களும் புரிந்து விட்டனர்..தற்போது நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களும் முடிந்து இறுதி தீர்ப்புக்கு காத்துக்கொண்டு இருக்கிறோம்..

    அரசால் இயற்றப்படும் அரசாணை( Government Order) பெரிதா???

    அரசை உருவாக்கும் மக்களால் இயற்றப்பfஉம் மக்கள் ஆணை(Makkal Order) பெரிtha

    By
    P.Rajalingam Puliangudi

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive