NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இலவச செல்போன், ஸ்கூட்டருக்கு 50% மானியம், மின்கட்டண சலுகை: அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.

மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படும்.வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும். அம்மா பேங்கிங் கார்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வர் ஜெயலலிதா அதிமுக தேர்தல் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டார்.
அதிமுக கொள்கை பரப்புச் செயலாளாரும், எம்.பி.யுமான தம்பிதுரை தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். விவசாயி ஒருவரும், இல்லத்தரசி ஒருவரும் தேர்தல் அறிக்கையைப் பெற்றுக்கொண்டனர்.தமிழகம், புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.தேர்தல் அறிக்கையில் கவனிக்கத்தக்க 10 அம்சங்கள்
* மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்க 50% மானியம் வழங்கப்படும்.
* தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
* 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணமில்லை.
* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச செல்போன் வழங்கப்படும்.
* தமிழகத்திற்கான லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.
* விவசாயிகளுக்கு அனைத்து கடன்களும் தள்ளுபடி
* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது.
* அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும்.
* ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய வசதி அமைத்துத் தரப்படும்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:விவசாய மேம்பாடு - விவசாயிகள் நலன்:
* கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
* 2016 முதல் 2021 வரையிலான 5 ஆண்டு காலத்தில் 40,000 கோடி அளவிற்கு பயிர்க் கடன் கூட்டுறவு வங்கிகள்மூலம் வழங்கப்படும்.
* உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் 20,787 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
* தரமான விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
* பண்ணை எந்திரங்கள் வாங்க மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
* நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* தரிசு நிலங்கள் சீர்திருத்தப்பட்டு, நீராதார அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பயிர் செய்ய வழிவகை காணப்படும்.
* தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர் சாகுபடிக்கு தரமான இடுபொருட்கள் உரிய நேரத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
* வாழை, இளநீர், மாம்பழம், திராட்சை மற்றும் காய்கறிகள் ஆகியவற்றிற்கென சிறப்பு வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்படும்.
* சூரிய சக்தியால் இயங்கும் விவசாய மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80 சதவீத மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
* விவசாயிகள் பயன் பெறும் வகையில் கிடங்குகள் மற்றும் குளிர்ப் பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.
* விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயறு வகைகள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளும், நுகர்வோரும் பயன் பெறுவர்.
* பருத்தி உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும்.
* தென்னை விவசாயிகளின் வருவாய் பெருக உரிய நடவடிக்கைகள்எடுக்கப்படும்.
* வயதான மற்றும் பூச்சி நோய் தாக்குதலுக்கு இலக்கான தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்யும் வகையில் ஒரு புதிய சிறப்பு திட்டம் 800 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
* இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படும்.
* மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
* விவசாயிகளுக்கு தொடர்ந்து கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
* டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஷேல் எரிவாயுத் திட்டம் போன்ற விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது.
*விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது அனுமதிக்கப்படமாட்டாது.
* மேம்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* விவசாயிகள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யும் வகையில் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் கணினிமயமாக்கப்பட்டு மின்னணு ஏலமுறை இணையதளவசதிகள் ஏற்படுத்தப்படும். விளைபொருட்களின் சந்தை விலை நிலவரம் குறித்த ‘குறுஞ்செய்தி’ சேவை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
* அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைத்து, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கவும், நுகர்வோரின்தேவையின் அடிப்படையில் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ள உரிய முன் பின் இணைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இதற்காக எளிதில் வீணாகும் தன்மை கொண்ட காய்கறி மற்றும் பழ வகைகளுக்கு தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குளிர்சாதன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.
* கரும்புக்கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம்செய்யப்படும்.
* சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கொப்பரை விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நதிநீர் மற்றும் நீர் ஆதாரம்:
* உச்ச நீதிமன்ற உத்தரவு பெற்று காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் எந்த அணையையும் கட்ட எத்தனிக்கும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும்.
* தமிழகத்திற்கு கிடைத்திடும் நீரை குறைக்கும் வகையில் கேரள அரசால் அணைகள் கட்டப்படுவது தடுக்கப்படும்.
*அதே போன்று தமிழகத்திற்கு கிடைக்கப் பெறும் நீரை குறைக்கும் வகையில் அண்டை மாநிலங்கள் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைகள் மூலமும், உச்ச நீதிமன்றத்தின் மூலமும் தடுக்கப்படும்.
*தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
*மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* பம்பா-அச்சன்கோயில்-வைப்பாறு இணைப்பு திட்டம் செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* தஞ்சாவூர் மாவட்டம், நெய்வேலி வடபாதி கிராமத்தின் அருகே அக்னியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும். ஆறுகள், ஏரிகள், குளங்கள் தூர்வாருதல் மற்றும் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
* நீர் வள, நில வளத் திட்டத்தின் கீழ் 2-ஆம் கட்டப் பணிகள் 2,950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த உலக வங்கி கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
கால்நடை மற்றும் மீன்வளம், மீனவர் நலன்:
* புதிய கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
* புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும்.
* பெரிய பால்பண்ணைகள், பால் குளிர்விப்பான்கள் ஆகியவை அமைக்கப்படும்.
* வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 4 ஆடுகள் விலையின்றி வழங்கப்படும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* தீவன அபிவிருத்தித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* கறிக்கோழி பண்ணைகள் மற்றும் நாட்டுக் கோழி பண்ணைகள் ஏற்படுத்த மானியம் வழங்கப்படும்.
* உள் நாட்டு மீன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்ப நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
*மீனவர் நிவாரண உதவித் தொகை திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணத் திட்டம் மற்றும் மீன்பிடி குறைந்த காலத்திற்கான நிவாரணத் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வழங்கப்படும்நிவாரண உதவித் தொகைகள் 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
* மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* மீன் பதனப் பூங்காக்கள் அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
* கச்சத்தீவை மீட்டெடுத்து பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன்பிடி உரிமையை நிலைநாட்டிட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
* இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
* கடல் அரிப்பு உள்ள இடங்களில் தூண்டில் வளைவு அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
உழவர் பாதுகாப்புத் திட்டம்:* வாழ்நாள் முழுவதும் பயனளிக்கக் கூடிய உழவர் பாதுகாப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
பேரிடர் இன்னல் குறைப்பு திட்டம்:* கடலோர மாவட்டங்களில் புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கும் கடலோர பேரிடர் இன்னல்கள் குறைப்பு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். பேரிடரிலிருந்து பாதுகாப்பு வழங்கும் வீடுகள் கட்டுதல், பாதுகாப்பு மையங்கள் அமைத்தல், பாதுகாப்பு மையங்களுக்கான வழித்தடங்கள் அமைத்தல், முன்னெச்சரிக்கை அறிவிப்பு கருவிகள் நிறுவுதல், மீன் வளத் துறையின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், தந்தியில்லா தொலை தொடர்பு வசதி ஏற்படுத்துதல், நாகப்பட்டினம் கடலூர் மற்றும் வேளாங்கண்ணி நகரங்களில் மின் வழித் தடங்களை பூமிக்கடியில் நிறுவுதல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. 691 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 790 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் 2018-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.
வருவாய் துறை திட்டங்கள்:* வீடில்லா ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்ட் இடம் அளிக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* தேவைக்கேற்ப புதிய வட்டங்கள் மற்றும் வருவாய் கோட்டங்கள் ஏற்படுத்தப்படும்.
* மக்களைத் தேடி அரசு என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா திட்டம் மற்றும் அம்மா சேவை மையம் ஆகியவை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
பள்ளிக் கல்வி மேம்பாடு :*11-ஆம் வகுப்பு/12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்படும்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்த மடிக் கணினியுடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதியும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
அனைவருக்கும் உடல் நலம்:* ஒவ்வொரு ஆண்டும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.
* மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வு முறை தொடர்ந்து எதிர்க்கப்படும்.
* சிறுவர், சிறுமியர்களுக்கு அங்கன்வாடி மற்றும் பள்ளிகள் மூலமாக வைட்டமின் ‘சி’ மாத்திரை வழங்கப்படும்.
கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம்:
* மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் அனைவரும் பயனடைவதுடன் தற்போது100 யூனிட் வரை பயன்படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.
நெசவாளர் நலன்:
* பொங்கல் திருநாளுக்கு 500 ரூபாய் மதிப்பில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து கைத்தறி துணிகள் வாங்கிக் கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 500 ரூபாய்க்கான வெகுமதி கூப்பன் வழங்கப்படும்.
* கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
* விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
உப்பளத் தொழிலாளர் நலன் :* உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக் கால பராமரிப்பு உதவித் தொகை 5,000 ரூபாய் வழங்கப்படும்.
வணிகர் நலன் :* தமிழ்நாட்டில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது.
* வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் தொகுப்பு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
* வியாபாரிகள் எவ்வித இடையூறுகளுக்கும் உள்ளாகாமல் வியாபாரம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பத்திரப் பதிவு எளிமைப்படுத்துதல் :* சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு எளிமைப்படுத்தப்படும். எ வழிகாட்டு மதிப்பீடு நிர்ணயிக்கும் முறை சீரமைக்கப்படும்.
சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல் :* மீனம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்கப்படும்.கோயம்புத்தூர்-உப்பிலிப்பாளையம்-அவினாசி சாலை முதல் சின்னியம்பாளையம்-காளப்பட்டி, விமான நிலையம் வரை உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்கப்படும்.
* கடலூர் துறைமுகம், ஆழ்கடல் துறைமுகமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மோனோ ரயில் திட்டம்:சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
தகவல் தொழில்நுட்ப சேவைகள் :*அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு செட் டாப் பாக்ஸ் விலையின்றி வழங்கப்படும்.
*விலையில்லா கைப்பேசி வழங்கும் திட்டம் :அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும்.
சமூக நலத் திட்டங்கள் :* தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
* திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து 1 சவரன் (8 கிராம்) ஆக உயர்த்தி வழங்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் :
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் புதிய வழித் தடங்கள் அமைக்கப்படும். கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் முதல் புனித தோமையர் மலை வரை மற்றும் சின்னமலை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான வழித்தடங்களில் பயணிகள் ரயில் சேவை இந்த ஆண்டுதுவக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் எஞ்சியுள்ள வழித் தடங்களில் பயணிகள் சேவை படிப்படியாக 2017- ஆம் ஆண்டு முதல் துவக்கப்படும். வண்ணாரப் பேட்டையிலிருந்து திருவொற்றியூர் / விம்கோ நகர் வரையிலான நீட்டிப்புக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. பழைய மகாபலிபுரம் சாலை வழியாக மாதவரம் முதல் சிறுசேரி வரை, நெற்குன்றம் முதல் கலங்கரை விளக்கம் வரை மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரைஉள்ள 88 கி.மீ. நீள மூன்று வழித் தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடன் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இலங்கை தமிழர்கள் :* இலங்கை தமிழர் இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இலங்கை தமிழர்கள் முழு சுதந்திரம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இதன் பயனாக அவர்கள் தங்கு தடையின்றிவேலைவாய்ப்பு பெற இயலும்.
மதுவிலக்கு கொள்கை:* மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்.
லோக் ஆயுக்தா அமைப்பு :* ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும். லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர உள்ள திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் தகவல் தொழில்நுட்ப சேவைகள் :*அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு செட் டாப் பாக்ஸ் விலையின்றி வழங்கப்படும்.
*விலையில்லா கைப்பேசி வழங்கும் திட்டம் : அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும்.
சமூக நலத் திட்டங்கள் :* தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
* திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து 1 சவரன் (8 கிராம்) ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மதுவிலக்கு கொள்கை:
* மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்.
புதிய கிரானைட் கொள்கை:
* புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும். கள்ளத்தனமாக கிரானைட் கற்கள் வெட்டியெடுத்தது தொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசுக்கு ஏற்பட்ட இழப்பு வசூலிக்கப்படும். புதிய கிரானைட் கொள்கைவகுக்கப்படும்.
அரசு ஊழியர் நலன் :
*மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
*மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த பேறு கால விடுமுறையை 6 மாதங்களாக உயர்த்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. அது 9 மாதங்களாக உயர்த்தப்படும்.
அம்மா பேங்கிங் கார்டு :ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும். வங்கிகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive