Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET ARTICLE:தமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்.

        மாண்புமிகு அம்மாவின் கருணைப் பார்வைக்காகதமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்.

எதிர் வரும் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில் கட்டாயம்  TET நிபந்தனைகளுடன்பணியில் உள்ள  ஆசிரியர்களின் கண்ணீருக்கு நல்ல பதில் கட்டாயம் மாண்புமிகுதமிழக முதல்வரிடமிருந்து  வரும் என்ற எதிர்பார்ப்புடன் சுமார் 3100ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 23/08/2010 க்குப் பிறகு இடைநிலைமற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநியமனம் பெற்றவர்கள் கட்டாயம் 15/11/2016 க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும் எனும் நிபந்தனை உள்ளது.கடந்த ஐந்து வருடங்களாக இந்த நிபந்தனைகளுடன் பணி புரிந்து வரும் ஆசிரியர்கள்தமது தகுதியை தாம் கற்பிக்கும் மாணாக்கர்களின் தேர்ச்சி விழுக்காடு மூலமாகநிரூபித்தும் வந்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இவர்களுக்கு முறையே வழங்கப்பட வேண்டிய  TETவாய்ப்புகளும் கிடைக்காமல் போயின.தமிழக அரசின் முழு ஒப்புதலின் பேரில் பணி நியமனம் பெற்ற போதும்23/08/2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற இவ்வாசிரியர்கள் தற்போதுபணிப்பாதுகாப்பு இல்லாத சூழலில் மிகுந்த கவலையில் தம் ஆசிரியப் பணிக்காலத்தைக் கடத்தி வருகின்றனர்.வளரூதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பணிப்பதிவேடு தொடக்கம்,தகுதியான விடுமுறை, தகுதி காண் பருவம் முடிக்க முடியாமை போன்ற எண்ணற்றபிரட்சனைகளில் ஆங்காங்கே பல ஆசிரியர்கள் சிக்கி உள்ளனர்.ஒரு சில ஆசிரியர்கள் ஊதியம் பெறாமலேயே இன்றுவரை  பணிபுரியும் நிலையும் உள்ளது.இது சமயம் பல வழக்குகளும் நீதி மன்றங்களில் நிலுவைகளில் உள்ளன.

இந்த பிரட்சனைகளின் ஒரே தீர்வு  இந்த 3100 அரசு பணியில் உள்ள பட்டதாரிஆசிரியர்களுக்கு TET லிருந்து முழு விலக்கு கொடுப்பது மட்டுமே.இந்த வகை ஆசிரியர்களின் பிரட்சனைகளை பல செய்தி ஊடகங்களும் இணைய ஊடகங்களும்அவ்வப்போது  வெளியிட்டு வருகின்றன.கடந்த டிசம்பர் மாதம் இவ்வகை ஆசிரியர்கள் சுமார் 50 பேர் தமிழக பள்ளிக் கல்விஇயக்குனரிடம் மனு அளித்தனர்.கடந்த ஜனவரி 08,09 ஆம் தேதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட இந்தநிபந்தனைகளுடன் பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழக அரசின் நேரடி கவனத்தில் கொண்டுசெல்ல மாண்புமிகு தமிழக முதல்வரின் தனிப் பிரிவில் மனு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் உயர் மட்டக் குழுவில் உள்ள மாண்புமிகு முதன்மைஅமைச்சகளுக்கும், மாண்புமிகு தமிழக கல்வித் துறை அமைச்சருக்கும் தனித்தனியேகடிதங்கள் எழுதி மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தில் கொண்டு செல்லபரிந்துரை செய்யவும் வேண்டினர்.மாண்புமிகு தமிழக முதல்வர் கட்டாயம் இவர்களின் பிரட்சனைகள் தீர ஒருநல்லதீர்வினை எதிர் வரும் தமிழக சட்டப் பேரவையின் கூட்டத்தில் அறிவித்தது இந்த3100 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காப்பார் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டுஉள்ளதாக  23/08/2010க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்தெரிவிக்கின்றனர்.இந்த வகை நிபந்தனையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில்உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் நிலை மாற்றம் பெறுவது மாண்புமிகு தமிழக முதல்வரின்கருணைப் பார்வையில் உருவாகும் ஒர் அரசாணையில் தான் உள்ளது.கல்வி சார்ந்த அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்த வேண்டுதல்களை முறையாகதமிழக அரசின் மேலான கவனத்தில் கொண்டு சேர்த்து நல்ல தீர்வு காண வேண்டும் எனஇவ்வாசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

( தென்னகக் கல்விக் குழு~~~ கோவை )




1 Comments:

  1. சார் 15.11.2011 முன் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டுமா

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive