நாடு முழுவதும் அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆகிறது.

         நாடு முழுவதும் அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப்படும், இது தொடர்பாக மத்திய மந்திரிசபை ஒரு வாரத்தில் முடிவு எடுக்கும் என பாரதீய ஜனதா அரசின் 2-வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
 
          2-வது ஆண்டு நிறைவு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிந்து நேற்று 3-வது ஆண்டு தொடங்கியது.

இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம், சகாரன்பூரில் நேற்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர்நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அவர் கடந்த 2 ஆண்டுகளில் தனது அரசு சாதித்தது என்ன என்பது குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:- நமது நாட்டிலே திட்டங்களை ஜாதி, இனம் மற்றும் ஓட்டு வங்கி பார்த்து தொடர்புபடுத்துகிற வழக்கம் இருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் எனது குடும்பம். அதில் ஜாதிக்கும், சமூகத்துக்கும் இடம் இல்லை. ரூ.2 லட்சம் கோடி திட்டம் 2022-ம் ஆண்டு, நமது நாடு சுதந்திரம் அடைந்ததின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிற வேளையில், நாட்டில் உள்ள ஏழைகள், விவசாயிகள்வருமானம் இரு மடங்காக உயர்கிற வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க விரும்புகிறோம். கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.2 லட்சம் கோடி வழங்குகிற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இந்த திட்டத்தின் மூலம்கிராமங்கள் மாற்றி அமைக்கப்படும். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மின்வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். மண்ணில் இருந்து பொன் நமது நிலங்கள் பாழாய்ப்போய் விட்டன. எனவேதான் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கி இருக்கிறோம். எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை விவசாயிகள் அறிவார்கள். நீர்ப்பாசனத்தை பொறுத்தமட்டில்நம்மிடம் பெரிய கனவுகள் இருக்கின்றன. நமது விவசாயிகளுக்கு தண்ணீர் தந்து விட்டால், அவர்கள் மண்ணில் இருந்து பொன்னை விளைவிப்பார்கள். கரும்பில் இருந்து எத்தனால் தயாரிக்கிற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறோம். இது கரும்பு விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டம் ஆகும். பெண்களுக்கான திட்டம் இப்போது ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஏனென்றால் பெண் சிசுக்கொலைகள் நடைபெறுகின்றன. எனவேதான் நாங்கள் பேட்டி பச்சாவ் பேட்டிபதாவ் (பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) திட்டத்தை செயல்படுத்துகிறோம். நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து, பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட எந்தவொரு பெரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊழல் 2 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கு பார்த்தாலும் ஊழல் பற்றிய செய்திகள்தான்.

அந்த அளவுக்குகொள்ளையடித்தனர். மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவா அவர்கள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டார்கள? முந்தைய அரசு பணத்தையெல்லாம் என்ன செய்தது என்பது தெரியாது. முந்தைய அரசை விட இந்த அரசு ஒரு நாளில் இரு மடங்கு அளவுக்கு சாலைகளை அமைக்கிறது. நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக செய்தித்தாள்களில் தினமும் ஒரு ஊழல் செய்தி வந்து கொண்டிருந்தது. இந்த ஊழல்களில் பெரிய மனிதர்கள் பிடிபட்டனர். நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர், எங்கள் அரசில் எங்காவது ஊழல் இருக்கிறதா? எங்கள் எதிரிகளாவது எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியது உண்டா? கழுகுக்கண்கள் எனது அரசு எந்தளவுக்கு கண்காணிக்கப்படுகிறது என்பதை நீங்கள்அறிவீர்கள். எனது அரசு கழுகு கண்களால் கண்காணிக்கப்படுகிறது. இந்தளவுக்கு எனது பணியை நெருக்கமாக கண்காணிப்பதை நான் வரவேற்கிறேன்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பைசாவுக்கும் அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். நான் எனது டாக்டர் நண்பர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு மாதத்தின் 9-வது நாளில், ஏழை கர்ப்பிணிகளுக்கு இலவச சிகிச்சை அளியுங்கள். மருந்துகளை இலவசமாக வழங்குங்கள். டாக்டர்களின் ஓய்வு வயது உத்தரபிரதேச மண்ணில் இருந்து கொண்டு நான் ஒரு அறிவிப்பு வெளியிடுகிறேன். அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 60 ஆக இருந்தாலும், 62 ஆக இருந்தாலும் இனி நாடு முழுவதும் அவர்களின் ஓய்வு வயது ஒரே மாதிரியாக 65 ஆக ஆக்கப்படும். இது தொடர்பான முறையானமுடிவை மத்திய மந்திரிசபை ஒரு வாரத்தில் எடுக்கும். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு, வளர்ச்சிதான். எனவே அதில் கவனத்தை செலுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive