மின் வாரிய ஊழியர் நியமனம்:எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு


காலி பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு நடக்க உள்ள தேதிகளை, தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து, மின் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மின் வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை மூலம், ஏப்., - மே மாதங்களில் நடக்க இருந்த எழுத்து தேர்வு, தேர்தல் நடத்தை விதி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த விவரம், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. தற்போது, 200 டைப்பிஸ்ட், 50 உதவி வரைவாளர், 25 இளநிலை தணிக்கையாளர் பணியிடங்களுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, ஜூன் 19ல் எழுத்து தேர்வு நடக்கும்.
இதை தொடர்ந்து, 250 இளநிலை கணக்கீட்டாளர், 25 சுருக்கெழுத்தர், 100 டெஸ்டர், 900 கள உதவியாளர், 100 இளநிலை உதவியாளர், 500 தொழில்நுட்ப உதவியாளர் எலக்ட்ரிக்கல், 25 தொழில்நுட்ப உதவியாளர் மெக்கானிக்கல் பணியிடங்களுக்கு, இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு, ஆக., 27, 28ம் தேதிகளில் எழுத்து தேர்வு நடக்கும். விண்ணப்பதாரர்கள், விரிவான கால அட்டவணை பற்றிய தகவல்களை, tangedco.directrecruitment.in/ www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive