Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

சம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்

           மருத்துவ விடுப்பு நாட்களை, பணி நாட்களாக கருதி, எட்டுமாதம் சம்பளம் வழங்க கோரி, தேனி மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலகம் முன், பள்ளி தலைமை ஆசிரியை, மகனுடன் உண்ணாவிரதம் இருந்தார்.
 
          தேனி மாவட்டம், போடி ஒன்றியம், கூழையனுார் அரசு நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியை கற்பகம், 46. இதற்கு முன், இவர் குண்டல்நாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார்.

கடந்த ஆகஸ்டில், இவரை மாவட்ட கல்வி நிர்வாகம் மலைப்பகுதியிலுள்ள நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை ஆசிரியை கற்பகம், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவுப்படி, அவர் போடி ஒன்றியம், கூழையனுார் அரசு நடுநிலைப் பள்ளியில், 2016 ஏப்., 20ம் தேதி, பணியில் சேர்ந்தார்.இதற்கிடையில், மருத்துவ விடுப்பில் இருந்த, எட்டு மாதங்களை, தன் பணி நாட்களாக கருதி, அதற்குரிய சம்பளம் வழங்க, மாவட்ட கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்தார். இதை கண்டு கொள்ளாததால், நேற்று தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு வந்த கற்பகம், மகனுடன், அலுவலகம்முன் தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive