அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,''தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்கள் உள்ளன.

இவற்றில் பொறியியல் பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு கால டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு புதிதாக 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.2016-17-ம் கல்வி ஆண்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.150. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை விண்ணப்பம் வாங்கிய பாலிடெக்னிக் கல்லூரியில் ஜுன் மாதம் 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments