NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பயிற்சி படிப்பு: விண்ணப்ப வினியோகம் துவக்கம்


           ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் 27ம் தேதி துவங்கியது. ஜூன், 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
  
         ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் நேற்று துவங்கியது. விண்ணப்ப வினியோகம் துவங்கியது முதலே, மாணவர்கள் விண்ணப்பங்களை ஆர்வமுடன் பெற்று சென்றனர்.

           பிளஸ் 2 தேர்வில், 540 மதிப்பெண்கள் மேல் பெற்ற மாணவர்கள், ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, அதிகபட்ச வயது, 35.

           ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கு, அதிகபட்ச வயது, 40. இதர பிரிவு மாணவர்கள், 31.7.13 அன்று, 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

               எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், 250 ரூபாயும், மற்ற பிரிவு மாணவர்கள், 500 ரூபாய் செலுத்தி, விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive