Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சேதமடைந்த கட்டடங்களில் பாடம் நடத்தாதீர்: பள்ளி கல்வித்துறை


           "பருவமழை துவங்கிவிட்டதால், சேதமடைந்த, அரசு பள்ளி கட்டடங்களில், மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்" என தலைமையாசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

         தமிழகத்தில், அரசு பள்ளிகளில், விபத்தை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேதமடைந்த கட்டடங்களில் வைத்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டாம் என, தலைமையாசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

             மேலும், பள்ளிகளில், எம்.எல்.ஏ., எம்.பி., நிதியில், புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு, பலமாதமாக திறக்கப்படாமல் இருந்தால், அவற்றை பயன்படுத்திக் கொண்டு, வேறொரு நாளில், அதற்கு முறைப்படி திறப்பு விழா நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

               மதியத்திற்குப் பின் மழை வருவதற்கான அறிகுறி தென்பாட்டால், மாணவர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே, பள்ளி வேலை நேரத்தை முடித்து, அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். மேலும்,பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரை, உடனுக்குடன் அகற்றவும் நடவடிக்கை எடுக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.




1 Comments:

  1. MLA, MP Nithi-il kattappatta PUTHIYA KATTADANGAL ellam verum MANALIL MATTUME KATTI IRUKKIRARGALE! ITHARKKU ORU VAZHI KOORI 100-KKANAKKANA MANAVARGALIN VAAZHKKAIYIL oli yetrungale!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive