Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆன்-லைன் மருத்துவ நுழைவுத் தேர்வு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


             மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வை, ஆன் - லைன் மூலம் நடத்த அனுமதிக்குமாறு, தேசிய தேர்வு வாரியம், சுப்ரீம் கோர்ட்டிடம் அனுமதி கோரியுள்ளது; இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது.

                எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட், ஜூலை 18ம் தேதி உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும், இந்த ஆண்டிற்காவது தேர்வு நடத்த அனுமதிக்குமாறும் மத்திய சுகாதாரத் துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது.

           இந்நிலையில், முதுகலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ஆன் - லைன் மூலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என தேசிய தேர்வு வாரியம் சுப்ரீம் கோர்ட்டிடம் அனுமதி கோரியுள்ளது.

          இப்போது, எழுத்து முறையில் நடைபெறும் அந்தத் தேர்வை "எய்ம்ஸ்" நிறுவனம் நடத்தி வருகிறது. பொதுப் பிரிவில் உள்ள 50 சதவீத இடங்களை நிரப்ப ஆன் - லைன் தேர்வு நடத்த அனுமதிக்குமாறு தேசிய தேர்வு வாரியம் தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive