NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்

 
           ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது. டி.இ.டி., தேர்வில், மொத்தம் உள்ள, 150 மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. சமீபத்தில், இந்த அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். 5 சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி பெற்றனர்.
                டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில், 60க்கு கணக்கிடப்படுகிறது. பிற கல்வி தகுதிகளில் எடுக்கும் மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படுகிறது. இரண்டையும் சேர்த்து, 100க்கு, தேர்வர் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில், வேலைக்கான தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தயாரிக்கிறது. இதில், டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண் கணக்கிட்டு, அரசாணை வௌ?யிட்டதில், தேர்வர்களுக்கு, மூன்று மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டு உள்ளது.

டி.இ.டி., தேர்வுக்கான, 150 மதிப்பெண், 60க்கு கணக்கிடப்படுகிறது. அதன் விவரம்:

* 90 - 100 சதவீத மதிப்பெண் எடுத்தால், 60 மதிப்பெண் (முழுமையாக வழங்கப்படுகிறது)

* 80 - 90 சதவீதம் வரை - 54 மதிப்பெண்

* 70 - 80 சதவீதம் வரை - 48

* 60 - 70 சதவீதம் வரை - 42

* 55 - 60 சதவீதம் வரை - 36

         இவற்றில், முதல் நான்கு நிலை வரை, 10 சதவீதம் இடைவெளி அளவில், ஒவ்வொரு நிலைக்கும், 6 மதிப்பெண் வித்தியாசத்தில், படிப்படியாக மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டுள்ளது.

பாதிப்பு:

          ஆனால், கடைசி நிலையில், 55 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையிலான, ஐந்து சதவீத இடைவெளிக்குள் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மட்டும், 36 மதிப்பெண் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. பத்து சதவீத இடைவெளியில் வருபவர்களுக்கு, 6 மதிப்பெண் வித்தியாசம் எனில், 5 சதவீத இடைவெளிக்குள் இருப்பவர்களுக்கு, மூன்று மதிப்பெண் வித்தியாசம் வர வேண்டும். அதன்படி, 39 மதிப்பெண் வழங்க வேண்டும். ஆனால், மூன்று மதிப்பெண் குறைத்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், வேலைக்கான ஒட்டுமொத்த தேர்வு பட்டியலில், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, பாதிப்பு ஏற்படும். ஒரு பக்கம், சலுகையை அறிவித்துவிட்டு, மறுபக்கம், இப்படி மதிப்பெண் குறைப்பது, எந்த வகையில் நியாயம் என, தேர்வர் கேள்வி எழுப்புகின்றனர். தேர்வு வாரிய வட்டாரம் கூறுகையில், 'இந்த விவகாரத்தில், நாங்கள் எதுவும் கூற முடியாது. முறையாக பார்த்தால், கடைசி நிலை தேர்வர்களுக்கு, 39 மதிப்பெண் வழங்க வேண்டும். ஆனால், இதை, நாங்கள் கூற முடியாது. அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்' என, தெரிவித்தது. மதிப்பெண் சலுகையின் பின்னணியில் உள்ள பாதிப்பை, முதல்வர் விசாரித்து சரி செய்ய வேண்டும் என, தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.




11 Comments:

  1. என் இனிய ஆசிரிய நண்பர்களுக்கு!! வணக்கம்!!! 2013 மதிப்பெண் சரிப்பார்ப்பு முடித்த நாம் அனைவரும்மே துர்ரதிர்ஸ்டசாலிகளே! நான் அனைவரும் சிந்திக்க சில கேள்விகள்! (1) 2012-தேர்வில் மதிப்பெண்களை தளர்த்தவேண்டும் என அனைவரும் குரல் கொடுத்தோம், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம், அப்போது இந்த அரசு முடியவே முடியாது, திறமையன ஆசிரியர்கள் மட்டும்மே வேண்டும் என்றும், இது எங்கள் அரசின் கொள்க்கை முடிவு என்று அறிவித்தீர்கள்- அப்போது நாடாளுமன்ற தேர்தல் இல்லை. (2) உடனடியாக அவர்களுக்கு பணி வழங்கினார்கள். அப்போது பணி வழங்க எந்த முறையும் பின்பற்றவில்லை. ஆனால் 2013 தேர்வில் தேர்ச்சிப்பெற்று சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்தப்பின் மதிப்பெண் சலுகை அறிவிப்பது, எந்தவிதத்தில் உங்களின் கொள்கை முடிவோடு ஒத்திருக்கிறது??? நீங்கள் உங்ககள் சுயலாபத்துக்காக அறிவித்த இந்த அறிவிப்பால் அதிகமாக பாதிக்கப்பட்டது சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்து பணிக்காக காத்திருக்கிற நாங்கள் தான்!! எங்கள் அனைவருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும் இல்லை எனில் நாடாளுமன்றத்தேர்தலில் நீங்கள் கண்டிப்பாக உணரவேண்டிவரும் என எங்கள் அனைவரின் சார்பாக உரக்க கூறிக்கொள்கிறேன்!!!! நன்றி!!!! வணக்கம்!!!!!!!!!!

    ReplyDelete
  2. என் இனிய ஆசிரிய நண்பர்களே!!! வணக்கம்!!!! மதிப்பெண் தளர்வு பெற்றதால், தேர்வில் தேர்ச்சிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! “””இயல்பே இன்பம்!!!! ஏக்கம் நரகம்!!!!”””””-இது கண்ணதாசனின் வைர வரிகள். இந்த வரிகளைப் போன்று நீங்கள் இருக்க பழகுங்கள். சான்றிதழ் சரிப்பார்ப்பு முடிந்தவர்களுக்கு முதலில் பணி வழங்கட்டும், பிறகு உங்களுக்கு என அமைதியாக இருங்கள். தேவை இல்லாமல் வழக்கு தொடுப்பது, அதைப்பற்றி ஊடகங்களின் வாயிலாக விமர்சிப்பது என்பது நம்மையும் நம் ஆசிரிய குடும்பத்திற்க்கும் தான் கேடு. அரசையும் பணி வழங்க விடுங்கள். ஆகவே ஒன்றுபடுவோம்!!!!! பயன்பெறுவோம்!!!!!!! நன்றி!! வணக்கம்!!!!!

    ReplyDelete
  3. 1. ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற,
    (டி.இ.டி.,), தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை மதிப்பெண் தளர்வுக்குப்பின், தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும்
    82-89 marks= 39 points valanga vendum
    (OR)
    82- 84 marks= 38
    85- 89 marks= 40
    90- 94 marks= 42
    95- 99 marks= 44
    100-104 marks= 46
    105-109 marks= 48
    110-114 marks= 50
    115-119 marks= 52
    120-124 marks= 54
    125-129 marks= 56
    130-134 marks= 58
    135 & above marks= 60
    valanginal yarukum varutham irukkathu cases irukathu

    2. Weightage kanakiduthalil HSc marks variation (science group, art group and vocation group) irupathal Paper-2 calculation ill Degree & B.ED mattum kanakida vendum
    (OR)
    HSc ku matraga Seniorty waiting periods kanakidavendum ,

    1-2 years= 2 points
    3-4 years= 4 points
    5-6 years= 6 points
    7-8 years= 8 Points
    9-& above=10 points Valanga vendum

    3. Tharpoluthu TNTET eligibility qualify ana candidates Ku ethir varum BT Recruitments I'll First preference valanga vendum

    valangi AMMA avargal GO veliyida vendum

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நன்றி தினமலர்.மிகப்பெரிய சமூக அநீதி நடந்துள்ளது.

    ReplyDelete
  6. When will be the promotion to sec grade trs to BT trs in elementary section? Any one knows plz reply,,,,,,,,......

    ReplyDelete
  7. ரொம்ப அவசரம் ப்ளீஸ் காண்டக்ட் டேட் 2013 cv முடித்த candidate காண்டக்ட் உங்கள் மாவட்ட நண்பர்களை
    சேலம் பிரபா 9944315150
    ஈரோடு சுகந்தி 7845960012
    தஞ்சஓர் கார்த்திகா 9952946145
    மதுரை தசரதன் 9787021959
    குமிடி பூண்டி ராஜேந்தரன் 7871835631
    திருநெவேலி பனெட் 8190073640
    மதுரை ஸ்டாலின் 9952198486
    திண்டுகள் ஹரி 8760561190
    திண்டிவனம் நாராயண மூர்த்தி 9788895017
    திடிவனம் முருகன் 9677144052
    புழல் எஞ்சேல் தாமஸ் 9791008103
    ரெட் ஹில்ல்ஸ் மாதவி 984062130
    நாம் திங்கள் 03.03.14 இத் தேதி ரோடில் இறங்கி போராட வில்லை என்றால் காலமெல்லாம் நாம் ரோடில் தான் இருப்போம் உங்கள் ஆதரவை தாரீர் வெற்றி பெற செய்வீர்

    ReplyDelete
  8. 82 To 90 yeduthavangaluku 3 mark samooka aneethina antha 3 mark above 90 mela yeduthavangalukku kadaipidikkathathu samooka aneethi kidayatha ..... Nanbarkale konjam sinthiunggal.

    ReplyDelete
  9. Mr.sivakumar neevir valzha ungal 82-89 marks= 39 points valanga vendum endra korikkaiya 2014 tet kku vendum endru koorungal ean C.V mudithu velai kidaikkum endra mudivil kaathirrukum avarkalidam vendha punnil vel i paichadeenga....comment podatheenga. Mr agaramudhalvan ungal korikkai vetriadaya valthukkal. yaravathu velaikku poi avanga kudubathai yavadhu kappathattum. "naama valavittalum mathavanga kudumbatha valavaipor sangam".....

    ReplyDelete
  10. iruka edam koduthaa padukka paai kekkureenga.... edatha koduthaa madatha kekkureenga enna koduma sir..............

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive