Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ்–1 வகுப்புகள் ஜூன் 16–ந்தேதி திறக்கப்படுகின்றன: பள்ளிக்கல்வி இயக்குனர்

      தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றனகோடை விடுமுறை கோடை காலத்தையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை விடப்பட்டன. தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 200 தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 700 உயர்நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரம் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

         இந்த பள்ளிக்கூடங்களில் 6 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். 1 கோடியே 50 லட்சம் மாணவமாணவிகள் படிக்கிறார்கள்.
 
        இவர்களில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் 30–ந்தேதி வரை நடந்தது. அதன் பின்னர் கோடை விடுமுறை விடப்பட்டது. உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் 23–ந்தேதி முடிவடைந்து விடுமுறை விடப்பட்டன.
 
பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுகின்றன
 
          தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து இன்று திறக்கப்படுகின்றன. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறுகையில் திட்டமிட்டபடி அனைத்து பள்ளிக்கூடங்களும் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன என்றும் பிளஸ்–1 வகுப்புகள் மட்டும் ஜூன் 16–ந்தேதி திறக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

           பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுவதையொட்டி விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றிருந்த மாணவமாணவிகள், பெற்றோர்கள் அவர்களின் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.




1 Comments:

  1. Computer teachers illamal cs group sera mudiyamal maanavargal avadhi
    Thaniyar palliyil 20000 to 25000 cs group padippadharku
    16 date ikkul cs post nirappappaduma
    kadavul dhan kappatra vendum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive