Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிக்கனமும் (சிறு)சேமிப்பும் - கட்டுரை


முன்னுரை :
“சிக்கனம் வீட்டைக்காக்கும்,சேமிப்பு நாட்டைக் காக்கும்”. “சிறுகக் கட்டி பெருக வாழ்” என்பது                முது மொழி. “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று வள்ளுவர் கூறியுள்ளார். அத்தகுசிறப்பு வாய்ந்த  சிக்கனத்தைப் பற்றியும் அதனைச் சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும் இக் கட்டுரையில் காண்போம்.

சிறுதுளி பெறு வெள்ளம் :
வள்ளுவர் கூறும் அறம், பொருள், இன்பம் என்கின்ற மூன்றில் பொருளை மட்டும் பெற்றுவிட்டால் அறமும், இன்பமும் தானே வந்துவிடும். தண்ணீரை அணைகள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றில் தேக்கிவைத்துத் தேவைக்கேற்பப் பயன்படுத்துவது போல பணத்தையும் சிறுக சிறுக சேமித்துப் பழகினால் அது நம் எதிர் கால தேவைக்குப் பயன்படும்.
சிக்கன வாழ்வு :
காந்தியடிகள் பல்துலக்கும் வேப்பங்குச்சியைக் கூட சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார். “தேவைக்கு மேல் பொருள் வைத்திருப்பவன் திருடன் ஆவான்” என்றார் காமராசர். புலியைப் பார்த்து பூனைச் சூடு போட்டுக் கொண்டதைப் போல செல்வர்களைப் பார்த்து அளவுக்கு அதிகமாக செலவு செய்தல் கூடாது. வருவாய்க்கு ஏற்பச் செலவு செய்தல் வேண்டும். தாணும் உண்ணாமல் பிறரையும் உண்ணவிடாமல் இருத்தலே கஞ்சத்தனம். சிக்கனம் கஞ்சத்தனம் அன்று.
பணத்தைப் பற்றிய பழமொழிகள் :
“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை”,”பணம் பத்தும் செய்யும்”, “பணம் இல்லாதவன் பிணம்”, “பணம் பந்தியிலே”- என்பன பணத்தின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்கும் பழமொழிகள்.
சேமிக்கும் வழிகள் :
சேமிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. பள்ளிகளில் சேமித்துப் பழக வேண்டும் என்பதற்காக “சஞ்சாயிகா” எனும் திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. நாம் அரசு சிறு சேமிப்பு நிலையங்கள், அரசு வங்கிகள், அஞ்சலகங்கள், சேமிப்புஆவணங்கள் ஆகியவற்றில் பணத்தைச் சேமிக்கலாம்.
சேமிப்பின் பயன்கள் ;
நாம் சேமிக்கும். பணம் நமக்கு வட்டியுடன் கிடைக்கிறது. நாட்டு நலத்திட்டங்களுக்கும் பயன்படுகிறது நாமும் நம்முடைய தேவைக்கும் பயன் படுத்திக் கொள்ளலாம். நோய், விபத்து, திருமணம்,           உயர் கல்வி போன்றத் தேவைக்கும் பயன்படுகிறது.
முடிவுரை :
சிக்கனப் பண்பு சிறந்த பண்புகளுள் ஒன்று. சேமிப்பு நம் மனதைத் தூய்மை படுத்தும்.                 பிற்கால வாழ்வை ஒளி மயமாக்கும். சேமிப்பு வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது. எனவே நாம் அனைவரும் சிக்கனத்தைப் பின்பற்றிச் சேமிக்க பழகுவோம்.
           
By,
இரா.இராஜா,எம்.ஏ.,பி.எட்.
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)
  அரசினர் ஆ.தி.ந.உயர் நிலைப்பள்ளி
        திருமலைராஜபுரம்.
9443489078





22 Comments:

  1. Very thank u

    ReplyDelete
  2. Very thank u

    ReplyDelete
  3. அருமையான தகவல், நம்மால் ஆன உதவிகளை எளியவர்களுக்கும் முதியவர்களுக்கும் செய்வோம்

    ReplyDelete
  4. Super idea very useful thanking you

    ReplyDelete
  5. Very useful...and easy to understand

    ReplyDelete
  6. மிகவும்நனறி!

    ReplyDelete
  7. Very useful and thanks bro

    ReplyDelete
  8. The katturai lines are super💘

    ReplyDelete
  9. மிக அருமையாக உள்ளது. நன்றி!

    ReplyDelete
  10. good really good

    ReplyDelete
  11. Useful For school students

    ReplyDelete
  12. சிக்கன வாழ்வு :அருமை #

    ReplyDelete
  13. Thanks sir it was helpful for doing my homework

    ReplyDelete
  14. Thanks sir...... It was very helpful for doing my homework..... Thanks sir.....

    ReplyDelete
  15. இதை பற்றி கவிதை எதாவது இருக்கிறதா

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive