Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்லூரி ஆசிரியர்கள் 3 நாள்கள் மறியல்

          பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
 
           இதுகுறித்து கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சென்னையில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கடந்த 1-1-2006-இல் பணி நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் 6,000 முதல் 8,000 உதவிப் பேராசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
28-5-2012 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள 3,120 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை 1,244 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,876 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
மேலும், சுயநிதி கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களுக்கு அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைத்துள்ளதுபடி ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதுபோல், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கட்டண நிர்ணயக் குழு மூலம் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதுபோன்று பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவே இல்லை.
எனவே, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24,25,26 தேதிகளில் சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட கூட்டு நடவடிக்கைக் குழு முடிவு செய்துள்ளது என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive