பிளஸ் 2 வணிகவியல் தேர்வில், முதல் மூன்று
பாடங்களில் இருந்து, 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றன. இதனால்,
எளிதில் தேர்ச்சி பெறலாம் என, மாணவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
தமிழகத்தில்
நேற்று, பிளஸ் 2 வணிகவியல், ஹோம் சயின்ஸ் மற்றும் புவியியல் பாடங்களுக்கு
தேர்வு நடந்தது. வணிகவியலில், ஒரு மதிப்பெண், 40; நான்கு மதிப்பெண், 10;
எட்டு மதிப்பெண், ஐந்து; 20 மதிப்பெண் வினாக்கள், நான்கு இடம் பெற்றன.
இதில், முதல் மூன்று பாடங்களான அமைப்பு, பணி வணிகம் மற்றும் கூட்டாண்மையில்
இருந்து, 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெற்றன.
மேலும்,
பாடத் திட்டத்தில் இருந்தும், பாடப் புத்தகத்தில் இருந்து மட்டுமே
வினாக்கள் இடம் பெற்றன. 'புளூ பிரின்ட்'டில் இடம் பெற்ற பெரும்பாலான
வினாக்கள், தேர்வில் வந்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். வணிகவியல்
தேர்வில், 46 பேர் காப்பியடித்து பிடிபட்டனர். இதில், 17 பேர் தனித்
தேர்வர்கள்.







ராஜ்ச் லாக்மி
ReplyDelete