அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்களைக்
கொண்டுவருவதில் கூகுள் எப்போதும் முன்னோடியாகத் திகழ்கிறது. அந்த வகையில்
தற்போது தொலைதொடர்பு சேவையிலும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தோடு
இறங்கியுள்ளது.
ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். வை-ஃபை
இணைப்பைப் போல இணைய தொடர்பை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக இரண்டு
தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு சேர்ந்துள்ளது.
இந்த நிறுவனங்களின் இணைய சேவையை எந்த
இணைப்புகளும் இல்லாமல் கூகுள் கொடுக்கும். தற்போது அமெரிக்காவில் மட்டும்
இதை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் போனுக்கு செலவிடும் தொகை குறையும்
என்று கூறியுள்ளது.
ஒயர்கள் வழி எந்த இணைப்பு செலவுகளும் இல்லை என்பதால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செலவுகள் பெருமளவு குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இதனால் அந்த நிறுவனங்கள் கட்டமைப்புக்கு
செலவிடும் தொகை குறையும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு விலை குறையும்
என்று கூறியுள்ளது. தற்போது இந்த இணைப்புக்கு 20 டாலரும், 1 ஜிகாபைட்
டேட்டா பயன்படுத்த 10 டாலரை கட்டணமாகவும் நிர்ணயித்துள்ளது.
பல மாத ஆராய்ச்சிக்குப் பிறகு இப்புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...