NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"பாளம்... பாளமாக' நேபாளம்

         உலகளவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாடு உருக்குலைந்து காணப்படுகிறது. 


பூமி மேலாக பார்க்கும் போது ஒரே மாதிரி இருப்பதாகவே தோன்றும். ஆனால் பூமி அமைப்பில் பல்வேறு புவி தட்டுளாக(பிளேட்) பிளவுபட்டுள்ளன. ஆப்ரிக்க தட்டு, அண்டார்டிகா தட்டு, யுரேசியன் தட்டு, இந்தோ - ஆஸ்திரேலியா தட்டு, வட அமெரிக்கா தட்டு, பசிபிக் தட்டு, தென் அமெரிக்க தட்டு என 7 முதன்மை தட்டுகள் உள்ளன. இது தவிர இதன் கீழ் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தட்டுகள் உள்ளன. ஒவ்வொரு தட்டும் மற்ற தட்டுகளுடன் தொடர்ந்து மோதுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

என்ன காரணம்:


இரண்டாம் நிலை தட்டான இந்திய துணைக்கண்ட தட்டும் - யுரேசியன் தட்டும் மோதும் பகுதியில் தான் நேபாளம் மற்றும் இந்திய வடக்கு எல்லையோர மாநிலங்கள் உள்ளன. ஆண்டுக்கு 5 செ.மீ., அல்லது 2 இன்ச் அளவில் இந்திய தட்டு - ஆசிய தட்டுடன் வடக்கு நோக்கி நகர்கிறது. இவ்வாறு இரண்டு தட்டுகளும் தொடர்ந்து மோதுவதால், அப்பகுதியில் அதிகமான சக்தியும் அழுத்தமும் உண்டாகிறது. அழுத்தம் மேலும் அதிகமாகும் போது நிலப்பரப்புகள் ஒன்று, மற்றொன்றின் மீது சரியத் தொடங்குகிறது. அப்போது பூமியின் மேற்பரப்பில் அதிர்வலைகள் உண்டாகி பாளம் பாளமாக வெடிக்கிறது. இது நிலநடுக்கமாக உணரப்படுகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்திய தட்டானது 6.5 அடி வரை முன்னோக்கி நகர்ந்துள்ளதாக ஹாங்காங் சீன பல்கலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.




இந்திய நிலப்பரப்பானது யூரோ-






ஆசியா நிலப்பரப்பின் மீது தொடர்ந்து மோதுவதால் பூமிக்கடியில் அளவுக்கதிகமான சக்தியும் அழுத்தமும் உண்டாகிறது. ஒரு நிலையில் இது நிலநடுக்கமாக உருவாகிறது. இந்த இரண்டு நிலப்பரப்புகளும் பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து மோதுவதால் இமயமலைத் தொடர் உருவானது. ஆண்டுதோறும் இமயமலையின் உயரம் 1 செ.மீ., வரை உயர்கிறது. இந்திய தட்டு கீழ்நோக்கியும், யுரேசிய தட்டு மேல் நோக்கியும் நகர்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive