தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 676 டேப்-டெக்னீஷியன்
காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து,
மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் எஸ்.மணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மருத்துவத் துறையில் காலியாக உள்ள 676 லேப்-டெக்னீஷியன் பணியிடங்களுக்கு
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு பிளஸ்-2 தேர்ச்சி
பெற்று, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, ஏதாவது ஒரு
நிறுவனத்தில், மருத்துவ ஆய்வக உதவியாளர் சான்று (சிஎம்எல்டி) பெற்றிருக்க
வேண்டும். வயது வரம்பு, 1-7-2015 அன்றைய நிலையில் எஸ்.சி., எஸ்.டி.,
பிரிவினருக்கு 35 வயதும், பி.சி., எம்.பி.சி, பி.சி.எம்.,பிரிவினருக்கு 32
வயதும், ஓ.சி. பிரிவினருக்கு 30 வயதும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கு, மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு விவரம் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால்
அங்கீகரிக்கப்பட்ட, கல்வி நிறுவனங்களின் பட்டியலும், வெளியிடப்பட்டுள்ளன.
இந்தக் கல்வி நிறுவனங்களில் படித்து, சான்று பெற்றவர்கள் மட்டுமே
இப்பணிக்கு தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம்
மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின், பதிவு மூப்பு பட்டியல், மாவட்ட வேலை
வாய்ப்பு அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் பெயர்
விடுபட்டிருந்தால், வரும் 30-ம் தேதிக்குள், மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Pls tell me the web address
ReplyDeleteகல்வித்தகுதி DMLT அல்லது CMLT? நான் DMLT முடித்துள்ளான் வாய்ப்பு இருக்கின்றதா?
ReplyDelete