பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர்த. சபீதா நேற்று நிருபர்களிடம்கூறியதாவது:-
2015-2015ம்
கல்வி ஆண்டில்பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜூன் மாதம் 1-ந்தேதிதிறக்கின்றன.
பள்ளிக்கூடம் திறக்கும் முன்பே அவர்களுக்குதேவையான பாடப்புத்தகங்கள்,
நோட்டு புத்தகங்கள்அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு
அனுப்பப்பட்டுஉள்ளன.
ஏற்கனவேபள்ளிக்கூடம் திறந்த அன்றுதான் மாணவர்களுக்கு
பாடப்புத்தகங்கள்வழங்கப்பட்டு வந்தன. வருகிற கல்வி ஆண்டில்எஸ்.எஸ்.எல்.சி.
மற்றும் பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு
முன்கூட்டியேபாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு வழங்கும் விலைஇல்லாத
14 விதபொருட்களும் மாணவர்களுக்கு தேவைப்படும்போதுஉரிய
நேரத்தில்வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல வருகிற கல்விஆண்டிலும்
வழங்கஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு த.சபீதாதெரிவித்தார்.
2012-ம் ஆண்டு
வேலைவாய்ப்புபதிவு மூப்புஅடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை
ஆசிரியர்தேர்வு வாரியம்நடத்தியது. அப்போது தரணிகோட்ட ஸ்ரீவித்யா
என்பவர்போலியாக சாதிசான்று கொடுத்துபணியில் சேர்ந்துள்ளார். ஆனால்
அவர்இன்றுவரை ஆசிரியர்பணியில் இருப்பதாககூறப்படுகிறது. அவரது பணி
ரத்தாகுமா? என்றுபள்ளிக்கல்வித்துறை முதன்மை
செயலாளர்த.சபீதாவிடம்கேட்கப்பட்டது.
உடனே அருகில்
இருந்தபள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பனை அழைத்துஇது குறித்துவிசாரித்து
நடவடிக்கை எடுங்கள் என்றார். முன்னதாகசென்னை டி.பி.ஐ.வளாகத்தில்
உள்ளதமிழ்நாடு பாடநூல்மற்றும் கல்வியியல்பணிகள் கழகமாநாட்டு
வளாகத்தில்2011-2012 ம்ஆண்டு முதல் 2014-2015 ம்ஆண்டு
வரைபள்ளிக்கல்வித்துறை அறிவித்த அறிவிப்புகள்மற்றும் அந்தஅறிவிப்புகளின்
தற்போதைய நிலை குறித்தும் கல்வித்துறைஅதிகாரிகள் மேற்கொள்ளவேண்டிய
நடவடிக்கைகள்குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு
பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் கே.சி.வீரமணிதலைமை தாங்கினார். கூட்டத்தில்
பள்ளிக்கல்வித்துறை முதன்மைசெயலாளர் த.சபீதா, கல்விதிட்ட இயக்குனர்பூஜா
குல்கர்னி, ஆசிரியர் தேர்வுவாரிய தலைவர்விபுநய்யர், தமிழ்நாடு பாடநூல்
மற்றும் கல்வியியல்பணிகள் கழகமேலாண்மை இயக்குனர்மைதிலி ராஜேந்திரன்,
பள்ளிக்கல்விதுறை துணை செயலாளர் சுபோத் குமார், பள்ளிக்கல்வி துறை
இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், பள்ளிக்கல்வி இயக்குனர்
ச.கண்ணப்பன், தண்.வசுந்தராதேவி, வி.சி.ராமேஸ்வரமுருகன், பிச்சைமற்றும்
இணைஇயக்குனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
10 social science bookla ennum neraya errors eruku.remote sensing lessonla 5 mark question Tamil mediuthla mathi kuduthuruku.like that so many errors have crept.first Ada edit pannetu kudutha nalla erukum
ReplyDelete