Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.எப். பணத்தை திரும்பப்பெறும் போது 10 சதவீத வருமான வரி வசூலிக்கப்படும்

       5 ஆண்டு காலத்துக்கு குறைவான அளவில் பணிக்காலத்தை நிறைவு செய்து, பி.எப். பணத்தை திரும்பப்பெறும் போது 10 சதவீத வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று உயர் அதிகாரி கூறியுள்ளார். 

        இது தொடர்பாக, சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

வருங்கால வைப்பு நிதி சேமிப்பு

இந்திய நிதி சட்டம், 2015 (20-வது 2015)-ல் வருங்கால வைப்பு நிதி சேமிப்பில் உள்ள தொகையினை உரிய தொழிலாளிக்கு பட்டுவாடா செய்வது குறித்த புதிய பிரிவு 192 ஏ சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவானது ஜூன் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 


இதன் மூலம், 5 ஆண்டுகளுக்கு குறைவாக பணிக்காலம் உடைய தொழிலாளியினுடைய வருங்கால வைப்பு நிதி சேமிப்பு தொகையானது ரூ.30 ஆயிரம் மற்றும் அதற்கு கூடுதலாக கணக்கு முடிப்பு பட்டுவாடா செய்யப்படும்போது, வருமான வரியானது குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் மூலத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படமாட்டாது. 

10 சதவீதம் பிடித்தம்

அதாவது, தொழிலாளி தனது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை சமர்ப்பித்திருந்தால், மூலத்தொகையில் இருந்து வருமான வரி பிடித்தமானது 10 சதவீதமாக இருக்கும். அவர் படிவம் எண் 15 ஜி, 15 எச்-ஐ சமர்ப்பித்திருந்தால் வருமான வரியானது மூலத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படமாட்டாது. 

தொழிலாளி தனது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (மற்றும் படிவம் எண் 15 ஜி, 15 எச்) சமர்ப்பிக்க தவறினால் அதிகபட்ச சதவீத அளவிலான (34.608 சதவீதம்) வருமான வரியானது மூலத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும். 

ஒரு சில சந்தர்ப்பங்களில் மூலத்தொகையில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்யப்படமாட்டாது. அதன் விவரம் வருமாறு:- 

பணி நீக்கம்

* ஒரு பி.எப். கணக்கில் இருந்து மற்றொரு பி.எப். கணக்கிற்கு தொகை மாற்றம் செய்யப்படும்போது. 

* உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பணியில் இருந்து நீக்கப்படும்போது, வணிக ஒப்பந்தத்தை தொழில் நிறுவனர் இடையில் முறித்துக்கொள்ளும்போது, திட்டம் நிறைவு பெறுதல் மற்றும் தொழிலாளியின் கட்டுக்கு அப்பாற்பட்ட நிலையில் பணி நீக்கம் அடையும்போது. 

* தொழிலாளி முந்தைய நிறுவனத்தின் பணிக்காலத்தோடு 5 ஆண்டுகள் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினராக தொடர்ந்து இருந்து பிறகு பி.எப். கணக்கை முடித்துக்கொள்ளும்போது. 

* உறுப்பினர் 5 ஆண்டுகளுக்கும் குறைவாக பணி புரிந்திருந்து ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவாக பி.எப். பட்டுவாடா பெறும்போது. 

பி.எப். பட்டுவாடா

* தொழிலாளி 5 ஆண்டுகளுக்கும் குறைவாக பணி புரிந்திருந்து மற்றும் ரூ.30 ஆயிரம் மற்றும் அதற்கு கூடுதலாக பி.எப். பட்டுவாடா பெறும்போது ஆனால் வருமான வரி நிரந்தர கணக்கு எண் மற்றும் படிவம் எண் 15 ஜி, 15 எச்-ஐ சமர்ப்பித்திருந்தால். 

மேற்கூறிய சட்ட மாற்றத்திற்கு உட்பட்ட வகையில் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர்கள் தங்களது பி.எப். கணக்கு முடிப்பு படிவம் எண் 19-ஐ சமர்ப்பிக்கும்போது பணி முடிப்பு பற்றியதான சரியான விவரத்தினை மற்றும் வருமானவரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) விவரத்தையும் உரிய பகுதியில் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். படிவம் எண் 15 ஜி, 15 எச்-ஐ பி.எப். கணக்கு முடிப்பு படிவ எண் 19 உடன் இணைக்கவும் தவறாதீர்கள். 

மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) நிறுவன அலுவலகங்களை அணுகவும். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive