Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரி ஆசிரியர்கள் 135 பேருக்கு தலைமை ஆசிரியர்களாக'பிரமோஷன்'

கல்வித் துறை வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு 135 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர்களாக பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை, பி.எட்.,கல்வித் தகுதி கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் குறைந்த பட்சம் ஐந்தாண்டு அனுபவம் பூர்த்தி செய்திருந்தால் அவர்களுக்கு, நடு நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் நிலை-2 பதவி உயர்வு தரப்படும்.
கடந்த காலங்களில் 20 ஆண்டுகள் முடிந்து கூட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. காலதாமதமாக பதவி பெற்றனர்.
இந்நிலையில், கல்வித் துறையில் இட மாற்றம் தொடர்பாக கலந்தாய்வு நடந்த சூழ்நிலையில், நேற்றிரவு பட்டதாரி ஆசிரியர்கள் 135 பேருக்கு தலையாசிரியர் நிலை-2 பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை பள்ளி கல்விதுறை இயக்குனர் ஜெரீனா பேகம் பிறப்பித்தார்.இது முதல் முறை: கடந்த காலங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சொற்ப அளவில்பதவி உயர்வு அளிக்கப்பட்டது. கல்வித் துறை வரலாற்றிலேயே தற்போது தான் முதல்முறையாக இவ்வளவு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்துள்ளனர்.
தலைமையாசிரிர்களுக்கும் பதவி உயர்வு:
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தை போன்று தலைமையாசிரியர்கள் நிலை-2 ஏழு பேருக்கு, பஜணை வட்ட ஆய்வாளர்களாக பதவி உதவி அளிக்கப்பட்டுள்ளது. அரும்பார்த்தபுரம் அரசுஉயர்நிலைபள்ளி தலையாசிரியர் ஜெயசெல்வி வட்டம்-1 துணை ஆய்வாளராக பதவி பெற்றார். நோனாங்குப்பம் அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ் வட்டம்-2, சேலியமேடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வீரப்பன் வட்டம்-3, மணலிப்பட்டு நடு நிலைப் பள்ளி தலைமையாசிரியர் குமார் வட்டம்-4, கீழ்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முனுசாமி வட்டம்-5, க்கு துணை ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இரண்டு தலைமை ஆசிரியர்களுக்கு வட்ட துறை ஆய்வாளாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.
இடமாற்றம்:
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்ததால், நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரிந்த 24 தலைமையாசிரியர்கள் பல்வேறு பள்ளிகளுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வைத்திக்குப்பம் அக்காசுவாமிகள் நடுநிலைபள்ளியில் பணியாற்றிய தலையாசிரியர் நவனீதம், முத்தியால்பேட்டை நடுநிலைப்பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.




1 Comments:

  1. I do not know as to "Why are the above promoted / transferred teachers not covered by General Counselling Process to be conducted every year ? Shall the Administrator explain this controversy in Education Department.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive