Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்களுக்கு கடிவாளம் அவசியம் தீர்வு என்ன?

       ஒழுங்கீனமாக நடந்து கொண்டஇரு தலைமை ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள் மீதுகல்வித்துறை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கநடவடிக்கையை கடுமையாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.விடலை பருவம் எனப்படும்பதின் வயதுகளில் மாணவமாணவியர்தெரிந்தோதெரியாமலோ தவறு செய்வது இயல்புபுகை பிடித்தல்மது அருந்துதல்காதல் வயப்படுவது இப்பருவ வயதின் வெளிப்பாடு. சமீபத்தில்கோவையில் பள்ளி மாணவி ஒருவர்மதுபோதையில்ரோட்டில் கலாட்டா செய்துபரபரப்பை ஏற்படுத்தினார்.
        இதேபோல்திருப்பூரில் பள்ளி மாணவர்கள்பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்வதும்போலீசார் அவர்களை துரத்தி பிடிப்பதும்வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில்ஒழுங்கீனமாக செயல்பட்டஇரு தலைமை ஆசிரியைகள் உட்பட நான்கு ஆசிரியர்கள்திருப்பூரில் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதுகல்வித்துறையினர் மத்தியிலும்பொதுமக்கள் இடையேவும்கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோருக்கு அடுத்தபடியாகஆசிரியரை தெய்வமாக மதிக்க வேண்டும் எனகுழந்தைகளுக்கு அறிவுறுத்துவது வழக்கம். ஆனால்படித்த ஆசிரியர்களே பண்பு தவறி நடப்பதுபெற்றோர் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களில் இருவர்தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,பள்ளிக்குள் சண்டையிட்டு கொண்டதையும்ஒருவர்தனக்காக சிலரை அடியாட்களாக பள்ளிக்குள் அழைத்து வந்ததையும்தனிநபர்களின் பிழையாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு ஆசிரியர்ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவியரிடம்மொபைல் போனில் ஆபாசப்படம் காட்டிபுனிதமான ஆசிரியர் பணியை கொச்சைப்படுத்தி உள்ளார். 
மற்றொரு பெண் ஆசிரியர்பாடப்புத்தகங்களை கூட தராமல்தான் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களை கழுவும் பணியைமாணவியருக்கு தந்திருக்கிறார். மாணவர் கழிப்பிடத்தைமாணவியர் பயன்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்தி இருக்கிறார்.
அறிவைஒழுக்கத்தைநல்ல பண்புகளை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களேசராசரிக்கும் கீழான மனநிலையில்பண்பின்றி நடந்துகொள்வதையாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 
ஒவ்வொரு குழந்தையையும்தங்களது பிள்ளைகளாக பாவித்துகல்வி கற்றுத்தரும் உண்மையான ஆசிரியர்களுக்குஇதுபோன்ற சிலரால்பெருத்த அவமானமே ஏற்படுகிறது.
துறை ரீதியாக பணியிடை நீக்கம்பணியிட மாறுதல் போன்ற சம்பிரதாய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்இத்தவறுகளை தொடராமல் தவிர்ப்பர் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. 
எனவேகடும் நடவடிக்கை தேவைப்படுகிறது.ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "ஆசிரியர் பணி என்பது,சமுதாயத்தில் மதிக்கப்படும் உன்னதமானது. எதிர்கால சமுதாயத்தைநல்லவிதமாக உருவாக்கும் கடமை உள்ளது. 
இதை மறந்துசிலர் கீழ்த்தரமாக நடந்து கொள்வதுமற்ற ஆசிரியர்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. ஒழுங்கீன ஆசிரியர்கள் மீதுதயவு தாட்சண்யமின்றிகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) சதாசிவத்திடம் கேட்டபோது,மாணவர்கள் தவறு செய்தால்அதுபக்குவம் இல்லாதஅவர்கள் வயதின் இயல்புதேவையெனில்அவர்களுக்கு கவுன்சிலிங்தரலாம். அனுபவம்முதிர்ச்சி பெற்ற ஆசிரியர்களே இதுபோல் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது மிகவும் தவறானது.
அவர்களிடம் போதிய மனப்பக்குவம் இல்லாததையே காட்டுகிறது. ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடாமல்ஆசிரியர்கள்தங்களை தாங்களே திருத்திக்கொண்டுசிறந்த முறையில் பணி செய்வதே,இதற்கு தீர்வாக அமையும்என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive