Home »
» வேறு பணிக்கு நியமிக்கக் கூடாது; பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.
கற்பித்தல் பணியை தவிர, வேறு பணிகளில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது.
மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், பாண்டியன், பரிமேலழகன், தண்டாயுதபாணி, தமிழ்குமரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் துரைசாமி வரவேற்றார். மாநில சிறப்பு தலைவர் சுப்ரமணியன், மாநில பொதுச் செயலா ளர் சுந்தரமூர்த்தி, ஓய்வு பெற்ற டி.இ.ஓ.,கோலக்காரன், முன்னாள் மாவட்டத் தலைவர் அன்பழகன் ஆகியோர் பேசினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்திட வேண்டும், தேர்வு மதிப்பீடு பணிக்கான உழைப்பூதியத்தை, இரு மடங்காக உயர்த்த வேண்டும், கற்றல், கற்பித்தல் பணிகளை தவிர்த்து பிற பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துதல் கூடாது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட அமைப்பு செயலாளர் விஸ்வலிங்கம் நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...