NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலையில்லா திண்டாட்டம்இந்தியாவில் அதிகரிக்கும்'

          'தற்போது நாட்டில், வேலை பார்க்கும் வயதில் உள்ளவர்களில், 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே வேலை கிடைக்கிறது; 
 
          அடுத்த, 35 ஆண்டுகளில், இது மேலும் குறைந்து, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.யு.என்.டி.பி., எனப்படும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் வெளியிட்டுள்ள, ஆசிய பசிபிக் மனிதவள மேம்பாட்டுஅறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:


* கடந்த, 1991 முதல்,2013ம் ஆண்டு வரை எடுக்கப்பட்டுள்ள கணக்கின்படி, இந்தியாவில் வேலை பார்க்கும் வயதை எட்டிய, 30 கோடி பேரில், 14 கோடி பேருக்கு மட்டுமே வேலைகிடைத்துள்ளது
* தற்போது சராசரியாக, ஒரு மாதத்துக்கு, 10 லட்சம் பேர் வேலையில் சேருகின்றனர்
* வேலை பார்க்கக் கூடிய வயது பிரிவில் உள்ளவர்களில், மூன்று கோடி பேர், மேல்படிப்பு படிக்கின்றனர்
* வரும், 2050ல், மேலும், 28 கோடி பேர், வேலை பார்க்கும் வயது பிரிவை எட்டுவர்
* மக்கள்தொகை அதிகமாக உள்ள இந்தியாவில், அதிக அளவு மக்கள் கிராமங்களில்இருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து வரும் நிலையில், அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்
* சீனாவில், உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான், அங்கு, ஏழ்மை குறைந்துள்ளது.
* இந்தியாவில், உற்பத்தி துறையின் பங்கு, நாட்டின் மொத்தஉள்நாட்டு உற்பத்தியில், 15 சதவீதம் மற்றும் வேலைவாய்ப்பில், 11 சதவீதமாக மட்டுமே உள்ளது
* உற்பத்தி துறையில் அதிக வளர்ச்சியை அடைந்தால் தான், எதிர்காலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive