Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏ.ஆர்.ஓ.க்களின் கவனத்திற்கு !!!

03.10.2016:
வழக்கம்போல படிவம் 4-ஐ பூர்த்தி செய்திட வேண்டும்.படிவம் 5-ல் 26.09.2016 முதல் 03.10.2016 முடிய   படிவம் 4-ல் உள்ள  விபரங்களை ஒருங்கிணைத்து ( தொகுத்து)  ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக எழுத வேண்டும்

04.10.2016:
படிவம் 6-ல்
(செல்லத்தக்க வேட்புமனுக்களின் பட்டியலில்) வேட்பாளர்களின் பெயர்களை தமிழ் அகரவரிசைப்படி (ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியே) எழுதவேண்டும்.
06.10.2016:
வாபஸ் முடிந்த பிறகு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை துண்டுச்சீட்டில்  எழுதி குலுக்கலில் எடுக்கப்பட்ட வரிசை முறையிலேயே இணைப்பு 4-ல் வேட்பாளர்களின் பெயர்களை எழுதி சின்னங்களின் பட்டியலில் உள்ள வரிசைப்படி சின்னங்களை ஒதுக்க வேண்டும். உதாரணமாக குலுக்கலில் முதலில்வரும் வேட்பாளருக்கு திறவுகோல்,  2-நபருக்கு சீப்பு, 3-வது நபருக்கு கட்டில், 4-வது நபருக்கு கார், 5-வது நபருக்கு சங்கு - இவ்வாறு ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக சின்னங்களை ஒதுக்கீடு செய்து இணைப்பு 4-ல் அந்த வேட்பாளருக்கு நேரே அந்தந்த வேட்பாளரிடம் ஒப்புதல் கையொப்பம் பெற வேண்டும் .இதே வரிசையில் படிவம்
-9 ஐ (போட்டியிடும்
வேட்பாளர் பட்டியலை)
பூர்த்தி செய்திட வேண்டும்.
இந்நிகழ்வு ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் சின்னஙகளின் பெயர்களை எழுதி குலுக்கக் கூடாது. வேட்பாளர்களின் பெயர்களைத்தான் குலுக்க வேண்டும். சின்னங்களின் எப்பொழுதும் மாறாது உதாரணமாக தமிழ்நாடு முழுக்க சிற்றூராட்சி (கிராம) வார்டுக்கான வாக்குச்சீட்டில் சின்னங்கள திறவுகோலில் ( சாவி) இருந்துதான் துவங்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive