Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒப்புகை சீட்டு முறையால் தேர்தல் முடிவு தாமதமாகும்: தேர்தல் கமிஷன்

தேர்தல்களில் ஒப்புகை சீட்டு வழங்கும் முறையை கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு தலைமை தேர்தல் கமிஷன் கருத்து தெரிவித்துள்ளது.
அதில், 100 சதவீதம் ஒப்புகைச் சீட்டு வழங்குவதற்காக ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. நாடு முழுவதும் ஒப்புகைச்சீட்டு முறை கொண்டு வரப்பட்டால், தேர்தல் முடிவுகள் வெளியிட 3 மணிநேரம் வரை தாமதமாகலாம். முதல் சுற்று நிலவரங்களை காலை 11 மணிக்கு முன் வெளியிட முடியாது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுக்கள் எண்ணப்படும் போது, ஓட்டு எண்ணிக்கை துவங்கிய அரை மணிநேரத்திற்குள் முதல்கட்ட நிலவரங்கள் தெரிய வந்துவிடும். ஆனால் காகித சிலிப்கள் மூலம் எண்ணப்பட்டால் தேர்தல் முடிவுகளை வெளியிட 3 மணிநேரம் வரை தாமதம் ஆகலாம். இது தோராயணமான தாமத நேரம் மட்டுமே. மனிதர்கள் எண்ணும் போது முதல் சுற்று எண்ணுவதை முடிப்பதற்கே வெகு நேரம் ஆகும் என தெரிவித்துள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive