Best NEET Coaching Centre

NEETக்கு எதிர்க்கும் பெற்றோர்களே TET எதிர்க்காதது ஏன்?

ஓர் அலசல்.
ஒட்டி வெட்டி நிதர்சனமான அலசல்.
ஐந்து வருடம் கல்லூரியில் கிடைக்காத தகுதி ஒரு தேர்வில் கிடைத்து விடுமா?நீட்டில் விலக்கு கேட்கும் மக்களே!பல வருடம் படித்து விட்டு வேலை கிடைக்காமல் வயிற்று பிழைப்புக்கு அல்லல் படும் பட்டதாரி மாணவர்களின் நிலையை கவனித்தீர்களா?ஆசிரியர் தகுதித்தேர்வில் கேட்கும் கேள்விகள் எந்த பாடதிட்டத்தில் (90% தமிழக பாடத்திட்டத்தில் தான் என்பது உண்மை) இருந்து கேட்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்?CBSE பாடதிட்டத்தில் கேட்டால் (CBSE பாடத்திட்டமும், SCERT மாநிலப் பாடத்திட்டமும் 90% ஒன்றே! பாடப்பொருளில் சிறிதளவு மாறுபாடு! மதிப்பீட்டில் பெருமளவு மாறுபாடு உள்ளது. தமிழக வினாத்தாள் மிக மிக எளிமையாக இருக்கும். மனப்பாடத் திறனை சோதிப்பதாகவே இருக்கும். சிந்தித்து, கற்றதை உணர்ந்து, பயன்படுத்தும் வினாக்களே இருக்காது!!?!?!?)தமிழக மாணவர்கள் தேர்ச்சி மாட்டார்கள் என சமூக நீதி இல்லை (இது உண்மையல்ல என்பதும், இப்போதைய சமூகநீதி என்ன என்பதும் அவர்களுக்கே தெளிவாகத் தெரியும்) என குமுறும் நீங்கள் தமிழ் படிக்காத, ஆங்கிலம் படிக்காத, பட்டதாரி அறிவியல் மற்றும் கணக்கு மாணவர்களுக்கு அப்பகுதியில் கேட்கும் வினாக்களுக்கு தெரியவில்லை எனில் சிரித்து ரசித்து தகுதி அவசியம் என (தன் பிள்ளைகள் நலன் கருதி!?) வரவேற்றீர்களே ஏன்?பட்டதாரி ஆசிரிய மாணவர்கள் படும் அவமானம் புரிகிறதா?மருத்துவ மாணவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் இதற்கு ஆசிரியர்களுக்குக் கொடுக்க மறந்தீர்கள்?பெரும்பாலான பிராய்லர் கோழிகளை உருவாக்கும், மிகச்சிறந்த சிறப்பான பள்ளி என வெளிச்சம் போட்டு காட்டிக்கொள்ளும் பள்ளிகளில் படித்த, (1190 க்கு மேல் மதிப்பெண் எடுத்த) அவர்கள் இரண்டு ஆண்டுகள் ஒராண்டுக்குரிய பாடத்தினை படித்து 1100 மேல் எடுத்த தகுதியான மாணவன் என்றால் நீட்டிலும் எடுக்க முடியும் தானே? ஏன் எடுக்க முடியவில்லை?? அதற்கு என்ன காரணம்? யார் காரணம்? எது காரணம்?CBSE பாடத்திட்டத்தில் மட்டுமே கேள்வி கேட்டார்கள் என்பது வடிகட்டிய பொய்.

மனப்பாடம் செய்து பதில் எழுதும் வகையில் கேட்கவில்லை என்பதும், முதலாம் ஆண்டு பாடப்பகுதியிலிருந்தும் கேட்கப்பட்டது என்பதுவும் மெய்.நமது தமிழக பாடத்திட்டம் மட்டமானது என்பது "முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது" போன்றது.தமிழக பாடத்திட்டம் இந்திய அளவில் தரமான பாடத்திட்டம் என NCERT ஆல் பாராட்டப்பட்டது என்பதும் உண்மை!சென்ற வருடம் SCERT ஆல் தயாரிக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறையால் வாராந்திரத் தேர்வுகள் நடத்தப்பட்டதன் நோக்கம் என்னவென்று தெரியுமா?மாணவர்களிடம் கற்றல் அடைவினை அளவிட மதிப்பீட்டு முறையில் மாற்றம் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முயற்சிக்கத் தொடங்கிவிட்டது என்பதன் வெளிப்பாடே!

அதற்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகம். (காரணம் வெள்ளிடைமலை)NEET, . . . போன்ற தேசிய அளவில் நடைபெறும் (NMMS, ஊரகத்) திறனாய்வுத் தேர்வுகளுக்கு நம் மாணவ மணிகளை தகுதியாக்குவதே!!!!!பல வருடங்களாக வினாத்தாளை மிக எளிமையாக அமைத்ததற்கும்,

தரம் குறைந்துகொண்டே வருவதற்கும்,

அகில இந்திய அளவில் நம் மாணவ, மாணவியர் சோபிக்காததற்கும்,

விவாதிக்காத,

விவாதப் பொருளாக்காததற்கும்,

யார் காரணம்? எது காரணம்? ஏன் காரணம்?

கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையா????இப்போது கேட்பதற்கும் அதுவே காரணம் என்பது விந்தையிலும் விந்தை.நீங்கள்தான் தனியாரிடம் லட்சக் கணக்கில் செலவு செய்தீர்களே பிறகு என்ன பயம்?அரசு பள்ளிகளில் ஆசிரியரே இல்லாமல் படித்த எத்தனை பட்டதாரி ஏழை மாணவர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?அதிக பணம் வசூலிக்கும் NEET coaching வகுப்புகளுக்கு ஏழை மாணவர்கள், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கிராமப்புற, . . . மாணவர்கள் என்ன செய்வார்கள்?100% நியாயமான கேள்வி! அதற்கு விடை காணுவோம்!மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, திறமையான மாணவ சமுயாயத்தை உருவாக்குகிறோம்?!?!? என சூளுரை முழங்கும் தனியார் பள்ளிகளில் அடிப்படை கல்வி உரிமைச் சட்டத்தில் 25% ஒதுக்கீடு சட்டப்பூர்வமாக பெற்று மேற்கூறிய ஏழை, ஒதுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட மாணவர்களுக்கு விடிவெள்ளியாகத் திகழ்ந்த(வர்கள்) நாம் மேற்கூறிய coaching வகுப்புகளிலும் 25% ஒதுக்கீடு பெற்று மாணவர் நலம் காப்போம்.பழையகால (சில பத்தாண்டுகள்) மதிப்பீட்டு முறையில் 1000 மதிப்பெண் வாங்க முடியாது.

ஆனால் தற்போது 1197 எப்படி?

இவர்களுக்கும் அவர்களுக்கும் வெயிட்டேஜ் முறை ஒன்றா?

உங்கள் சமூக நீதி எங்கே?

பட்டதாரி மாணவரின் பெற்றோரும் இப்படிதானே பாதிக்க பட்டிருப்பார்கள்?தங்களுக்கு என்றால் ரத்தம்!

மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்டினியா?NEET, TET அவசியமே!

Weight age முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.மாணவர் நலம் காப்போம்!

அவர்கள் உயர்வுக்கு காட்டும் ஆசிரியர் நலம் காப்போம்!!

தமிழன் படிக்காத மருத்துவக் கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ இந்தியா எங்கும் இல்லை எனும் நிலையை உருவாக்குவோம்!!!நம்மால் முடியும்!

நம்மால் மட்டுமே முடியும்!!

நம்மை விட்டால் நம் குழந்தைகளுக்கு யார் உளர்???காலை வேளையில், வாய்ப்பு கிடைக்கும் பொழுதில், கல்வியைப் பற்றி அலசும், அலச வைக்கும், தம்மை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் யாராலும் முடியாது.ஆசிரியர் நினைத்தால் எல்லாம் மாறும்.

மரம் வளர்க்க விதைகளை மட்டுமல்ல, நல் சமுதாயம் உருவாக நற்சிந்தனைகளை நம் மாணவர் மனதில் விதைப்போம்.நல்லதையே நினைப்போம்!

நல்லதையே செய்வோம்!!

நல்லதையே விதைப்போம்!!!

சமுதாய மலர்ச்சியை நம் கண் குளிர காண்போம்.

வாரீர்!

வாரீர்!!

அறைகூவல் விடுத்து ஆர்ப்பரித்து வாரீர்!!!இப்படை வெல்லும்.சிவ. ரவிகுமார்
10 Comments:

 1. It is realy true sir. Tet not only for our own subject questions. Combination of all subjects. It is not necessary for all questions. Pshy 30 tamil 30 eng 30 pure major questions 60 it is the framework

  ReplyDelete
 2. It is realy true sir. Tet not only for our own subject questions. Combination of all subjects. It is not necessary for all questions. Pshy 30 tamil 30 eng 30 pure major questions 60 it is the framework

  ReplyDelete
 3. Past ten years 850 mark in plus two was a good mark. Above 900 very good mark. That time not took mark for 1150. Or above 1150. Big achievement. Now all are reverse. All are getting 1180-1195 easily.

  ReplyDelete
 4. Sorry major 90 marks total 150

  ReplyDelete
 5. One of the very few people who understood the problems in current education policy and deeply explained the solution to longstanding problem which should have obtained by our politicians long time ago

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. Neenga solrathu ellam unmai than
  MBBS admission will be based on Neet nu 1 yr munnadiye sollirukkanum.last 2month LA sonna periya doctor a irunthalum 400+ marks edukkurathu kastam
  First understand the problem

  ReplyDelete
 8. Tet exam conducted only fir fifty days after 4 years

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive