NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சி.பா.ஆதித்தனார் செய்த சீர்திருத்தம் 11–ம் வகுப்பு பாடத்தில்!

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டித்தரப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தினத்தந்தி நாளிதழை நிறுவிய சி.பா.ஆதித்தனாரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில் 11–ம் வகுப்பில் தமிழ் பாடப்புத்தகத்தில் ஊடகத்தமிழ் என்ற பகுதியில் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார், ஊடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு, தமிழ் எழுத்தில் அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் ஆகியவை இடம் பெறுகின்றன.
இது பவளவிழா கொண்டாடியுள்ள தமிழகத்தின் முன்னோடி நாளிதழ் தினத்தந்தியை நிறுவிய சி.பா.ஆதித்தனாருக்கு தமிழக அரசு செய்துள்ள மிகப்பெரிய கவுரவமாகும்.
‘ஊடக தமிழ்’ என்ற முறையில் அவருடைய எழுத்து சீர்திருத்தம், அவர் ‘தினத்தந்தி’யை முதன் முதலில் தொடங்கியபோது, எளிமையான எழுத்துகளை கிராமத்தில் உள்ள ஏழை–எளிய மக்கள் ‘டீ’க்கடையில் கூட சென்று அவர்கள் கற்றுக் கொள்ளும் அளவுக்கு, அந்த எளிமையான எழுத்து சீர்திருத்தத்தை, மாணவர்களும் புரிந்துகொள்கிற அளவுக்கு சீர்திருத்த முறையில் கொண்டு வந்திருக்கிறார் என்பதை பல்வேறு தலைவர்களுடைய நிலைகளில் கொண்டுவருவதைப்போல இவரும் அதில் இடம்பெற இருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறும் இடம்பெற உள்ளது. நாம் போற்றக்கூடிய தேசிய தலைவர்கள், அதேபோல நம் மாநிலத்தில் மறைந்தும், மறையாமலும் இருக்கிற எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு காணுகின்றபோது அதுவும் இடம்பெறும்.
அதைப்போல, ஆசிரியர்களுக்கு கையேடுகளை வழங்க உள்ளோம். மாணவர்களின் எதிர்காலத்தில் உள்ள அச்சங்கள் மற்றும் சந்தேகங்களை மனதில் கொண்டு, ஆசிரியர்கள் பாடத்துடன் நற்பண்புகளை இணைத்து, ‘கற்பித்தலும், கற்றலும்’ என்ற முறையில் கையேடு தந்து, அதன் மூலமாக மாணவர்களுக்காக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
கையேட்டில் பல்வேறு சிறப்புகள் இருக்கிறது. மாணவர்களுக்கு எப்படி கல்வியை கற்றுத்தருகிறோம்? மாணவர்களுக்கான நற்பண்புகள், தேவையான பயிற்சிகள், எதிர்காலம், தன்னம்பிக்கை, கற்றல், கற்பித்தல், போன்ற பல்வேறு நிலைகள் அறிவு, ஆற்றல் போன்ற அனைத்தும் அதில் இணைக்கப்பட்டிருக்கின்றது.
மத்திய அரசு கொண்டு வருகிற பொதுத்தேர்வுகளுக்காக, ‘ஸ்பீடு’ நிறுவனத்தின் மூலம் 100 இடங்களில் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 75 ஆயிரம் மாணவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ள 312 மையங்களுக்கும் ஜனவரி 15–ந் தேதிக்குள் அந்த பணிகள் நிறைவுபெறும். அதற்கு பிறகு அனைத்து மையங்களிலும் இதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive