2018ம் ஆண்டிற்கான சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!!!

சென்னை: 2018ம் ஆண்டிற்கான சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. tamilvalarchithurai.com என்ற தளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து பிப்ரவரி 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தமிழ்த்தாய், கபிலர், உ.வே.சா., கம்பர், சொல்லின் செல்வர், உமறுப்புலவர், ஜி.யு.போப் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இளங்கோவடிகள், அம்மா இலக்கியம், சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருதுகளும் வழங்கப்பட உள்ளது என்றும் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், எழும்பூர், சென்னை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Share this