அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து: ஆகஸ்டில் மீண்டும் தேர்வு

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை ரத்து செய்து தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2017ம் ஆண்டு செப்டம்பர் 16ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வுக்கான மறுதேதி மே முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடக்கும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டணத்தை செலுத்தியவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Share this