NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானம்:முன்னாள் தலைமை ஆசிரியை தாராளம்

பவானி, அரசுப்பள்ளி கட்டடம் கட்ட நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக தந்த முன்னாள் பெண் தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா நடந்தது.ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.தற்போது ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை, 486 மாணவியர் படிக்கின்றனர். வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 2 வகுப்பு துவங்கவுள்ளது.


ஆனால்,போதிய இடவசதியில்லை.இந்நிலையில் சித்தோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பொன்மணிதேவி, 80, தன் சொந்த நிலம்ஒரு ஏக்கரை தானமாக வழங்கியுள்ளார். இதன் தற்போதைய மதிப்பு நான்கு கோடி ரூபாய்.இவர், 1964 முதல் ஆசிரியையாக பணிபுரிந்தார்.கோபி, மொடச்சூர் பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் 1996ல் ஓய்வு பெற்றார்.இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். ஒரே மகன் மயூரா கார்த்திகேயன் டாக்டருக்கு படித்தார். அவரும் எதிர்பாராதவிதமாக இறந்தார்.இதனால் தன்சகோதரி மாரத்தாள்அவரின் மகன்கள்அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.கடந்த 2006ல் பிற்
படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியருக்கு விடுதி கட்டடம் கட்ட 25 சென்ட் நிலம் வழங்கினார்.தற்போது சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாகஅளித்துள்ளார்.இவருக்கு நேற்று பாராட்டு விழாநடந்தது. விழாவில்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், நிலத்தை தானம் செய்வதற்கான பத்திரத்தை பொன்மணி தேவி வழங்கினார்.




4 Comments:

  1. அவர் பெயர் எந்த ஊர் தயை கூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன்...இறைவன் அவரது நற்பணிகளை ஏற்றுக் கொண்டு நலம் தர பிரார்த்தனை செய்வோம்..ஜாகிர் உசேன் பள்ளபட்டி

    ReplyDelete
  2. அவர் பெயர் எந்த ஊர் தயை கூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன்...இறைவன் அவரது நற்பணிகளை ஏற்றுக் கொண்டு நலம் தர பிரார்த்தனை செய்வோம்..ஜாகிர் உசேன் பள்ளபட்டி

    ReplyDelete
  3. sir pls we need mutual transfer willing format for this year

    ReplyDelete
  4. thalai vanankugirom

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive