++ அவசர சிகிச்சைக்கு ஆதார் அவசியமில்லை! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
ஹரியானாவில் ஆதார் இல்லாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சை
மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கான் பகுதியைச் சேர்ந்த முன்னி கேவத் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு வெள்ளியன்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கணவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அம்மருத்துவமனையின் மருத்துவரும் செவிலியர் ஒருவரும் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் அந்தப் பெண் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே குழந்தை பெற்றுள்ளார்.அவருக்கு அங்கிருந்த பெண்கள் உதவி செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அனுமதி மறுத்த மருத்துவரும் செவிலியரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தேசிய சுகாதார ஆணையத்தின் செயலாளர் மனோஜ் ஜலானி, “அவசர மற்றும் முக்கிய மருத்துவ சேவைகளுக்கு ஆதார் அவசியமில்லை. மனித நேயம் இல்லாமல் நடந்துகொண்ட மருத்துவர் மற்றும் செவிலியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது “என்று கூறியுள்ளார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...