எதிர்மறையான இரண்டு அப்டேட்கள்!

இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பிற்காக ஒரு புதிய அப்டேட்
ஒன்றினை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், அதற்கு நேர் எதிரான ஒரு அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனில் ஒரு பயனரின் அனுமதியின்றி அவரது போஸ்ட்களை பிற பயனர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும் பொழுது, பதிவு செய்த பயனருக்கு எச்சரிக்கை சமிக்கையை அனுப்ப புதிய வசதியை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.
புதிய அப்டேடில் இந்த வசதி இணைக்கப்பட்டுள்ளது. அதில் அனுமதியின்றி பிற பிற பயனர்களின் தகவல்களை மற்றவர்கள் பெறுவதை தடுக்க இந்த வசதியானது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு எதிர்மறையான ஒரு அப்டேட்டினை கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி இன்ஸ்டாகிராமில் ஒரு பயனர் பதிவிட்ட தகவல்களை பிற பயனர்கள் அவர்களின் பக்கத்தில் ஷேர் செய்துகொள்ளும் வசதி வெளியானது.
ஒரு பயனரின் அனுமதியின்றி அவரது தகவல்களை மற்ற பயனர்கள் பெற்று விடக்கூடாது என புதிய அப்டேட்டினை வெளியிட்டுள்ள நிலையில், கடந்த வாரம் வெளியான அப்டேட் எதற்காக என பயனர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்துள்ள இன்ஸ்டாகிராம், பயனரின் தகவல்களை அவரது நண்பர்கள் மட்டும் அவர்களது பக்கத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். பிறர் அதனைப் பயன்படுத்த முயற்சி செய்யும் பொழுது, அதற்கான எச்சரிக்கை தகவல் குறிப்பிட்ட பயனருக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த புதிய வசதி பல பயனர்களை கவர்ந்துள்ளது. ஏனெனில் பல சிறந்த போஸ்ட்களை தற்போது எளிதில் அவர்களது பக்கத்தில் பதிவிட்டு கொள்ள முடியும்.

Share this