வருமான வரி செலுத்தாதவர்களிடம் கூடுதல் வரி வசூலிப்பு

 அதிக அளவில் பண பரிமாற்றம் செய்பவர்கள், அதற்குரிய வருமான வரியை செலுத்தாமல் இருப்பவர்களை கூடுதலாக ரூ.1.7 கோடி வரை செலுத்த மத்திய அரசு நிர்பந்தித்து வருகிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் வரை ரூ.26,500 கோடி வரை பெறப்பட்டுள்ளது. 


பார்லி.,யில் நேற்று (பிப்.,09) கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த சில ஆண்டுகளாக, முறையாக வருமான வரி செலுத்தாமல், அதே சமயம் அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்து வருபவர்களை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது. எந்தெந்த வகைகளில் எல்லா அதிக அளவிலான பணபரிவர்த்தனை செய்யப்படுகிறது என்பதம் கண்டறியப்பட்டுள்ளது. 

ரூ.2 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்து, பங்குகள், பாண்டுகள், இன்சூரன்ஸ், வெளிநாட்டு பயணம் உள்ளிட்டவைகளுக்கான பண பரிவர்த்தனைக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையும் வருமான வரித்துறை கண்காணித்து, புள்ளி விபரங்களை சேகரித்து வருகிறது. இதன் பயனாக முறையாக வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 35 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு 67 லட்சம் பேர் வரி செலுத்தாமல் இருந்தனர். 


26 ஆயிரம் கோடி வரி வசூல்
பல்வேறு வகைகளாக வரி செலுத்தாதவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அத்தகையவர்களை எச்சரிக்கும் வகையில் குறுந்தகவல்களும், இமெயில்களும் அனுப்பி வருகிறோம். அதனைத் தொடர்ந்தே நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Share this