பள்ளிகளில் நல்லொழுக்கக் கல்வியை ஒரு பாடமாக வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
``பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்து வதும், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காமல் இருக்க பள்ளிகளில் உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும். நல்லொழுக்க கல்வியை தொடக்கக்கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை பாடமாக வைக்க வேண்டும்.

 மாணவர்கள், பெற்றோருக்கு மாதம் ஒருமுறை உளவியல் ஆலோசனைவழங்க வேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆசிரியர்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share this