சேதமடைந்த அரசு பள்ளி கட்டடம் : விபரங்களை அனுப்ப உத்தரவு

 மாநிலத்தில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்கள் குறித்த விபரங்களை சேகரித்து மார்ச் 5க்குள் அனுப்ப அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் 30 மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. 40 ஆண்டிற்கும் மேல் பயன்பாட்டில் உள்ள அரசு பள்ளிக் கட்டடங்கள் விபரம் சேகரிக்கப்பட்டது. அவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 2002 முதல் 2017 டிசம்பர் வரை மாநிலத்தில் இத்திட்டத்தில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள், மிக மோசமான நிலையில் சேதமடைந்த கட்டடங்கள் உள்ளிட்ட முழு விபரங்களை புகைப்படங்களுடன் மார்ச் 5க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, அனைவருக்கும் கல்விதிட்ட உதவி திட்ட அலுவலர்களை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்பின் தேவைப்படும் நிதி ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this