Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவனுக்கு சல்யூட் அடித்த கமிஷனர்!!

பெங்களூருவில் காவல் ஆணையர் ஒருவர் பள்ளி மாணவனுக்கு சல்யூட் அடித்த வீடியோ வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு மருத்துவமனை வளாகத்திலிருந்து காவல்துறை ஆணையர் சுனீல் குமார் வெளியே வந்தார். அப்போது அவருக்கு எதிராக பள்ளிச் சீருடையில் மாணவர் ஒருவர் வந்துள்ளார். அந்த மாணவர் ஆணையர் சுனீல் குமாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சல்யூட் வைத்தார். இதைக் கண்ட ஆணையரும் மாணவருக்கு சல்யூட் செய்தார். இந்த நெகிழ்வூட்டும் சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை பெங்களூரு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த பதிவில் ஒரு சீருடை மற்றொரு சீருடைக்கு மரியாதை செலுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 80 ஆயிரத்தும் மேற்பட்டோர் வீடியோவை பார்த்துள்ளனர்.,1500 பேர் பகிர்ந்துள்ளனர்.

காவல்துறையினர் சிலரின் செயல்களால் மக்களுக்கு அவர்கள் மீது நம்பகத் தன்மை இல்லாமலும், அச்சத்தையும் ஏற்படுத்தும் நிலையில் சுனீல் குமார் செயல் காவல்துறையினர் மீது மதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive