NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெண்களுக்கு நீதி கிடைக்க இரவு நேர கோர்ட்டுகள்!

 ஆள் கடத்தல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, உடனடியாக நீதி கிடைக்கும் வகையில், இரவு நேர நீதிமன்றங்களை அமைக்க, டில்லி அரசு திட்டமிட்டு உள்ளது.



கொள்கை வரைவு :

தலைநகர் டில்லியில், பெண்கள், குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதை அடுத்து, இத்தகைய சம்பவங்களை தடுப்பது, காப்பாற்றுவது, சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்புவது. மேலும், அவர்களுக்கு கல்வி மற்றும் சுகாதார வசதிகளை தந்து, பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது போன்ற திட்டங்களை செயல்படுத்த, ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கொள்கை வரைவை தயார் செய்துள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம் வருமாறு: பிற மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து பெண்கள்,குழந்தைகள், அதிகம் கடத்தி வரப்படும் நகரமாக டில்லி கூறப்படுகிறது. இதை தடுப்பதற்காக, ஒவ்வொரு மாவட்ட அளவிலும், கடத்தல் தடுப்பு பிரிவுடன், புதிகாக ஒரு குழு அமைக்கப்படும்.

போலீஸ் பாதுகாப்பு:

சிவப்பு விளக்குப் பகுதி களில் நடக்கும் கடத்தல்களை தடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள், அரசாங்க ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். பெண்களை தங்கள் கஸ்டடியில் வைத்திருப்பவர்களிடம் இருந்து அவர்களை மீட்டு கொண்டுவரத் தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும். மேலும், வழக்கு தொடர்பாக, நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகமால், 'வீடியோ கான்பரன்ஸ்' தொழில்நுட்ப உதவியுடன், சாட்சிஅளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள், இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கப்படுவதை தடுக்கவும், அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கவும், இரவு நேர நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். இந்த கடத்தலை தடுப்பதற்காக, தனியாக நிதி ஆதாரம் உருவாக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் நிதி, அவர்களின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தப்படும்.

இந்த புதிய கொள்கை வரைவு குறித்து, சம்பந்தப்பட்ட அரசு துறையினர், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல, 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பின், இந்த கொள்கை வரைவு, சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive