பிளஸ் 1 பொது தேர்வு - 85 சதவீதம் தாண்டவில்லை

பிளஸ் 1 பொது தேர்வில், வினாத்தாள் கடினமாக இருந்ததால், 90 சதவீதத்துக்கு அதிகமாக, மிக சிலரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர்களும், 85 சதவீதத்தை தாண்டவில்லை.ஆண்டு தோறும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளில், முடிவு எப்படி இருக்கும்; அதில், யார் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள, பெற்றோர், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரும் ஆர்வமாக இருப்பர்.இந்த ஆண்டு, பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், பிளஸ் 1ல் தேர்ச்சி விகிதம் என்ன; மதிப்பெண் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பே அதிகரித்துள்ளது.இதன்படி, நேற்று வெளியான தேர்வு முடிவில், மதிப்பெண் அளவு மாணவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. தேர்ச்சி பெறுவோமா என, மாணவர்கள் அச்சத்தில் இருந்த நிலையில், தேர்ச்சியில் பெரும்பாலும் பாதிப்பு இல்லை. தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வை விட அதிகமாக இருந்தது. ஆனால், பாடவாரியாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில், பெரும் சரிவு ஏற்பட்டிருந்தது.மற்ற பொது தேர்வுகளில் உள்ளதை போல், பிளஸ் 1லும், 'டாப்பர்' என்ற, 'ரேங்கிங்' முறை பின்பற்றப்படவில்லை. யார் முதல் மதிப்பெண், எந்த பள்ளி முதலிடம் என்பன போன்ற தகவல்கள் இடம் பெறவில்லை. அதேநேரம், மாணவர்களின் மதிப்பெண் அடுக்குமுறை வெளியிடப் பட்டது.இதில், மொத்தம், 600 மதிப்பெண்களுக்கு, 83 சதவீத மதிப்பெண்ணான, 500க்கு மேல், 36 ஆயிரத்து, 380 பேர் பெற்றுள்ளதாக, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அதில், 90 சதவீதத்துக்கு மேல், அதாவது, 550 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததால், அதை, தேர்வுத்துறை குறிப்பிடவில்லை.
29 சதவீதம், 'ஜஸ்ட் பாஸ்' தேர்வெழுதிய, 8.63 லட்சம் பேரில், 64 ஆயிரத்து, 817 பேர், 451 முதல், 500 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். இது, 75 முதல், 83 சதவீத மதிப்பெண். அதேபோல், 48 ஆயிரத்து, 532 பேர், 426 முதல், 450 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர்; இது, 71 முதல், 75 சதவீதம் மொத்த மதிப்பெண்ணில், 66 சதவீதத்துக்கும் மேல், அதாவது, 401க்கு மேல், 425 மதிப்பெண் வரை, 61 ஆயிரத்து, 351 பேர் பெற்றுள்ளனர். 351 முதல், 400 வரை, 1.60 லட்சம் பேரும்; 301 முதல், 350 வரை, 1.93 லட்சம் பேரும்; 201 முதல், 300 மதிப்பெண் வரை, 2.48 லட்சம் பேரும் பெற்றுள்ளனர் ஒவ்வொரு பாடத்திலும், தலா, 35 மதிப்பெண் வீதம், ஆறு பாடங்களில் குறைந்த பட்சம், 210 மதிப்பெண் பெற வேண்டும். இந்த, 'ஜஸ்ட் பாஸ்' வகையில், 29 சதவீதம் பேர், 201 முதல், 300 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர் தேர்வு எழுதிய, 8.63 லட்சம் பேரில், 70 சதவீதம் பேர், 210 முதல், 400 வரையிலான, 35 முதல், 65 சதவீத மதிப்பெண்களே பெற்றுள்ளனர். 4 சதவீதம் பள்ளி மாணவ - மாணவியரும், 5 சதவீத தனித்தேர்வர்களும், தேர்ச்சி பெறவில்லை

Share this

0 Comment to "பிளஸ் 1 பொது தேர்வு - 85 சதவீதம் தாண்டவில்லை"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...