அரசு பள்ளி வகுப்பறையில் 2 சிறுத்தை குட்டிகள்

காஷ்மீரில் உள்ள அரசு பள்ளியில் வகுப்பறையில், 2 சிறுத்தை குட்டிகள் இருந்தது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பஞ்சாரி பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது

நேற்று பள்ளி வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர், அங்கு 2 சிறுத்தை குட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் 2 சிறுத்தை குட்டிகளையும் ஆராய்ந்தனர்


 அப்போது அதில் ஒன்று இறந்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு விரைந்த அதிகாரிகளிடம் சிறுத்தை குட்டி ஒப்படைக்கப்பட்டது

Share this

0 Comment to " அரசு பள்ளி வகுப்பறையில் 2 சிறுத்தை குட்டிகள்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...