இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! புற்றுநோயை நெருங்க விடாதீங்க!இந்த தலைமுறை மக்கள் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.

அவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

1. மரபணு மாற்றப்பட்ட உணவுகள்:

புற்றுநோய் உண்டாக்கும் உணவுகளில் தவிர்க்க முடியாத ஒன்று மரபணு மாற்றப்பட்ட உணவுகள். 40 % மேற்பட்ட உணவுகள் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மரபணு மாற்றப்பட்ட உணவுகள் புற்றுநோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட சிரமப்படும். இதனால் புற்றுநோய் மனிதர்களுக்கு ஏற்படக்கூடியது அபாயம் உள்ளது.

2. மைக்ரோவேவ் உணவுகள்:

மைக்ரோவேவ் பயன்படுத்த வேண்டாம் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மைக்ரோவேவில் சமைக்கும் போது வெளியாகும் கதிர்வீச்சு புற்றுநோயை உண்டாக்கும். எனவே முடிந்த வரை மைக்ரோவேவ் பயன்படுத்த வேண்டாம். மைக்ரோவேவில் சமைத்த உணவுகளை தயவுசெய்து குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.

3. கேனில் அடைக்கப்பட்ட உணவுகள் :

உணவுகளை அடைக்க பயன்படுத்தும் இந்த கேன்களில் பிஸ்பீனால் - ஏ என்ற கொடிய வேதி பொருள் உள்ளது. இவை புற்றுநோய் உண்டாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில பிளாஸ்டிக் பைகளில் கூட இந்த வேதி பொருள் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

4. க்ரில்டு சிக்கன்:

அதிக நேரம் வெப்பத்தில் இறைச்சியை வாட்டும் போது ஹெட்ரோசைக்லிக் அரோமேட்டிக் அமைன் வெளியாகும். இந்த வேதி பொருள் மிகவும் மோசமான வியாதிகள் உண்டாக்கும். எனவே க்ரில்டு சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

5. ஊறுகாய்:

புற்றுநோய் உண்டாக்கும் உணவுகளில் ஊறுகாய் தவிர்க்க முடியாத ஒன்று. பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளும் புற்றுநோய் உண்டாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஊறுகாய் உற்பத்தி செய்ய பல வேதி பொருட்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் வரலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் உப்பு மட்டுமே சேர்த்து வீட்டில் தயாரிக்கும் ஊறுகாய் ஆரோக்கியமானது, இருந்தாலும் அளவாக சாப்பிடுவது நல்லது.

Share this