முதுநிலை மருத்துவம்: நிர்வாக இடங்களுக்கு கலந்தாய்வு

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தனியார்  மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற உள்ளது

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு மே 19 -ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது


மே 28 -ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது


செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 3 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 28 என மொத்தம் 31 இடங்கள் நிரம்பின. இவற்றில் 3 இடங்கள் மறுஒதுக்கீடு செய்யப்பட்டன

இன்றைய கலந்தாய்வு


 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற உள்ளது. காலை 10, நண்பகல் 12, பிற்பகல் 2 என மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெற உள்ளது


பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு மற்றும் மறு ஒதுக்கீடு பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தெரிவித்துள்ளது

Share this

0 Comment to " முதுநிலை மருத்துவம்: நிர்வாக இடங்களுக்கு கலந்தாய்வு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...