அவசியம் பிரண்டையை சாப்பிடுங்க..பிரண்டை கொடி
பிரண்டை கொடியானது தமிழ்நாட்டில் ஒரு முக்கிய oருத்துவ தாவரம். இது மனிதர்களுக்கு தேவையான ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. பிரண்டையை தினமும் உணவில் சேர்பதால் கிடைக்கும் நன்மைகள் கீழே தரப்பட்டுள்ளது.

பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம் சத்து அ‌திக‌ம் இரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு வள‌ர்‌ச்‌சி‌க்கு அ‌திக‌ம் உதவு‌ம். எனவே, கா‌ல்‌சிய‌‌ம் குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பிர‌ண்டையை அ‌திகமாக உண‌வி‌ல் துவையல் அல்லது பொரியலாக சே‌ர்‌த்து‌ உண்ணலாம்.

பிரண்டையில் இருந்து 6 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை தீரும்.

பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும் மற்றும் இரத்தத்தை சுத்திகரிக்கும். இதனால் இதயம் பலப்படும்.

அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையை சாறு பிழிந்து அதனுடன் புளி, உப்பு சேர்த்து காய்ச்சி மிதமான சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூசி பற்றுப் போட வீக்கம் குறையும்.

பிரண்டை உடலில் உள்ள கொழுப்பை விரைவாக கரைப்பதால், உடல் எடை குறைக்க நினைப்போர் தினமும் பிரண்டையை உணவில் சேர்த்து உண்ணலாம்.

பிரண்டை வயிற்றுவலி, வாயுத் தொல்லை குறையச் செய்யும் மற்றும் நாவில் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டவும் இது பயன்படுகிறது.

Share this