'கேட்' நுழைவு தேர்வு நவ.25ல் நடைபெறும்

கோல்கட்டா, 'கேட்' எனப்படும் மேலாண்மை
படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு, நவ., ௨௫ல் நடைபெற உள்ளது.மேற்கு வங்க தலைநகர், கோல்கட்டாவில் உள்ள, ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:மேலாண்மை படிப்புக்கான, 'கேட், ௨௦௧௮' பொது நுழைவுத் தேர்வு, நவ., ௨௫ல் நடைபெறும். நாடு முழுவதும் ௧௪௭ நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இந்த தேர்வுக்கு, ஆக., 8 முதல் பதிவு செய்யலாம். செப்., 19, கடைசி நாள்.நான்கு தேர்வு மையங்களை விருப்ப அடிப்படையில் தேர்வு செய்யலாம். முதலில் குறிபிட்டுள்ள மையம் ஒதுக்கீடு செய்ய இயலாவிட்டால், அடுத்தடுத்த மூன்று மையங்கள் பரிசீலனை செய்யப்படும்.விண்ணப்பதாரர்கள், அக்., ௨௪ முதல், தேர்வு மைய நுழைவுச் சீட்டை, இணைய தளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை iimcat.ac.in. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this

0 Comment to "'கேட்' நுழைவு தேர்வு நவ.25ல் நடைபெறும்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...