பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.2018


ஜூலை 27 - ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவுதினம்.


திருக்குறள்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.

பொருள்:

பொறாமை, ஆசை,கோபம்,
கடுஞ்சொல்  ஆகிய இந்த நான்கு  குற்றங்களையும் விட்டு நடப்பதே அறமாகும்.

பழமொழி

Bare words buy no barely

வெறுங்கை முழம் போடாது

பொன்மொழி

நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

 டாக்டர்.அப்துல்கலாம்

இரண்டொழுக்க பண்பாடு

1.இயலாதோரைப் பார்த்து ஏளனம் செய்யாமல், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன்.

2. எதையும் மூடநம்பிக்கையுடன் ஏற்காமல், அறிவியல் மனப்பான்மையுடன் ஆராய்வேன்.

பொதுஅறிவு

1.இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் நீர்வீழ்ச்சி எது?

 ஒககேனக்கல் நீர்வீழ்ச்சி
                             
2.மனித உரிமைகள் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது ?

டிசம்பர் 10

English words and. Meanings

Kidney ---சிறுநீரகம்

Lawful ----நியாயமான

Manufacture ---உற்பத்தி

Neighbour----- பக்கத்து          வீட்டுக்காரர்

Oar   ------     துடுப்புநீதிக்கதை

 இதை  தவறாமல்  படித்ததும்  பகிருங்கள் நண்பர்களே

ஒரு குட்டி கதை.....

ஒரு ஊரில் பெரிய கோயில் கோபுரத்தில்
நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,

திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது.

அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு
இடம் தேடி பறந்தன.

வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன.

அங்கும் சில புறாக்கள் இருந்தன.

அவைகளோடு இந்த புறாக்களும்
குடியேறின.

சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ்
வந்தது.

தேவாலயம் புதுப்பிக்க தயாரானது.

இப்போது இங்கு இருந்து சென்ற
பறவைகளும்
அங்கு இருந்த பறவைகளும்
வேறு இடம் தேடி பறந்தன .

வழியில் ஒரு மசூதியைக் கண்டன.

அங்கும்
சில புறாக்கள் இருந்தன.
அவைகளோடு
இந்த புறாக்களும் குடியேறின.

சில நாட்கள் கழித்து ரமலான் வந்தது
வழக்கம் போல்
இடம் தேடி பறந்தன.

இப்போது மூன்று இடத்திலும் உள்ள
புறாக்களும் கோயிலில் குடியேறின...

கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை
ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.

ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவிடம் கேட்டது
"ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"
என்று...

அதற்கு அந்த தாய் புறா சொன்னது

"நாம்
இங்கு இருந்த போதும் புறா தான்,

தேவாலயத்துக்கு போனபோதும் புறா
தான்,

மசூதிக்கு போன போதும் புறா தான் ",

"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"
சர்ச்க்கு போனால்
கிறிஸ்தவன்"
மசூதிக்கு போனால்"முஸ்லிம்" என்றது;

குழம்பிய குட்டி புறா"
*அது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும்* "என்றது.

அதற்கு தாய் புறா "

இது புரிந்ததனால்
தான் நாம் மேலே இருக்கிறோம்,
அவர்கள் கீழே இருக்கிறார்கள் என்றது..
 . . . . (படித்ததில் பிடித்தது)
👍👌👌🤟🤟🤟🤟🤟🤟🤟🤟

இன்றைய  செய்திகள்

*  பாகிஸ்தானில் புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் தனிப்பெரும்பான்மை இல்லையென்றாலும் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் நிலைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி உருவெடுத்துள்ளது.

*  2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதியை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

* 'ஆசியாவின் நோபல்' என்று அழைக்கப்படும் ராமன் மகசேசே விருதுக்கு இந்த ஆண்டு இந்தியர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  மனநல மருத்துவர் பரத் வத்வானி மற்றும் பொறியாளர் சோனம் வாங்சுக் ஆகியோர் தங்களின் சேவைக்காக இவ்விருதினை பெறுகின்றனர்.

* ரஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் செளரவ் வர்மா, ரிதுபர்னா தாஸ் உள்ளிட்ட 6 இந்தியர்கள் தங்களது பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

* பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான யூத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 128.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 613 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

Today's Headlines

🌸 A massive underground Lake has been detected for the first time on Mars raising the possibility that more water and maybe even life exist there., astronomers said on Wednesday.It is located under a layer of martian ice lake is 20 km wide said the report led by Italian researchers in the US journal science🌷

🌸 Coimbatore: T Shiny a rich  ,class 5th students might look small and feeble but she has recently displayed her grit and talent in silambam and maduvu at the South Asian silambam Championship held in Kanyakumari and bagged 3 gold medals and  a bronze🌷

🌸 Coimbatore: The first phase of Tamil Nadu engineering admission online counselling for candidates with cut off marks above 190 began on Wednesday🌷

🌸West Bengal Assembly passes resolution to rename State as ‘Bangla🌷

🌸 lunar eclipse 2018:Weather permitting, get ready for a beautiful celestial sight on Friday 27 July, when a total lunar eclipse will be visible from almost all parts of the world. The only people missing out this time are Greenlandic, Canada and the USA.💐💐💐

Prepared by
Covai women ICT_போதிமரம்

Share this

0 Comment to "பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.2018"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...